Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானை வென்ற இலங்கை


பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், ஆரம்பத்திலிருந்தே இஷான் மலிங்க (2), விஜயகுமார் வியாஸ்காந்த், தசுன் ஷானக (3), நுவான் துஷாரவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தபோதும் அணித்தலைவர் சஹிப்ஸடா பர்ஹானின் 76 (47), அரஃபாத் மின்ஹாஸின் ஆட்டமிழக்காத 34 (20) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணித்தலைவர் குசல் மென்டிஸின் ஆட்டமிழக்காத 87 (48), கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 40 (27), சினெத் ஜெயவர்தனவின் 38 (26) ஓட்டங்களோடு 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் மொஹமட் இம்ரான் 4-0-31-1, மின்ஹாஸ் 3-0-26-1, சுஃபியான் மொக்கிம் 4-0-35-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக குசலும் தொடரின் நாயகனாக பர்ஹானும் தெரிவாகினர்.

tamilmirror


 


Post a Comment

0 Comments