Ticker

6/recent/ticker-posts

இரவு வேளையில் முன்னாள் அமைச்சரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் - தப்பியோடிய பிரதான நபர்


முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித்த ராஜபக்சவின் வீட்டிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரகித்த ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்காகவே இந்த அதிகாரிகள் குழு இராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.

தப்பியோடிய பிரதான நபர்

எனினும், அந்த நேரத்தில் ரகித்த ராஜபக்ச மற்றும் அவரது சாரதி ஆகிய இருவருமே தங்களது கைத்தொலைபேசிகளை இயங்காத நிலையில் வைத்துள்ளனர். அத்துடன் அவர்கள் வீட்டிலிருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரகித்தவின் தந்தையான விஜேதாச ராஜபக்சவும் அந்த நேரத்தில் தனது மகனைத் தேடுவதற்காக அவரது நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அது பலனளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலகக் குழுத் தலைவரிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு, ஒரு மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித்த ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamilwin


 


Post a Comment

0 Comments