Ticker

6/recent/ticker-posts

அச்சாணி இல்லாத தேர்!


அச்சாணி இல்லாத தேர்
முச்சாணியும் நகராது.
வரப் பொழியாத மேகம்
வேளாண்மை  வளர்க்காதே.

முயற்சி எடுக்காப் பயிற்சி
வலு செழிக்குமா சொல்.
வெறும் புகழ்ச்சிப் பேச்சிலே
வாழ்க்கை மலருமா சொல்.

அடித்தளம் வைக்கும் கைகள் 
தான் நாளை வீடு எழுப்பும்.
எச்சரிக்கையோடு
நிதானமிருந்தால் .
விபத்துக் கதவு  திறக்காது.

எச்சரிக்கை இல்லாப் போக்கு
எச்சமயமும் உதவாது.
சமன் இழந்த சக்கரம் போலே
வாழ்க்கை வண்டி நகராது.

கடல் மூழ்காமல் 
முத்துக்கள் சேருமா சொல்.
சிறு வலி தாண்டிப் போனால்
பெருவாழ்வு இனித்திடும் கேள்.

ஆர்.எஸ்.கலா

 


Post a Comment

1 Comments