Ticker

6/recent/ticker-posts

சின்ன மொட்டு!


நித்தம் நித்தம் நினைவு தட்டும்
நான் பார்த்த சின்ன மொட்டு.
சத்தம் இல்லாத சின்ன மலர் 
சாயும் காற்றில் நித்தமும் ஆடும்.

சின்ன சின்ன செல்லப் பேச்சு
சில்லென்று வந்து நெஞ்சைத் தட்டும்
குருகுருப் பார்வை வெளமாக
மழைத் துளி விழும் மின்னல் பார்வை.

சின்ன மொட்டு நாணம் கொண்டு
கண்ணைச் சிமிட்டி 
பாதிச் சொல்லைச் சொல்லுகின்றாள்.
மீதிச் சொல்லை நெஞ்சில் விட்டு.
என் உள்ளம் 
முழுதும் காதல் நிறைந்து விட்டது.

அச்சம் அவளை கட்டி நிக்கிறது
வெட்கம் வந்து 
தோளைத் தட்டுகின்றது.
சின்ன மொட்டு 
மெல்லச் சிரித்தால் போதும்.
என் வாழ்க்கை சுவாசம் 
நாளெல்லாம் நீளும்..

ஆர்.எஸ்.கலா 

 


Post a Comment

0 Comments