Ticker

6/recent/ticker-posts

பிரான்ஸில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. நாளுக்கு நாள் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!


பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளை மேம்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் தொடங்கிய போராட்டம், விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடியால் சலுகைகள் குறைப்பு உள்ளிட்டவற்றால் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் பாரிஸ் நகரில் இருந்த ஏராளமான கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்த நிலையில், மீண்டும் பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

பாரிஸ் நகரில் நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட சாலைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றபோது காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், கூட்டமாக முன்னேற முயன்றவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். இதேபோல, மார்சேய்(MARSEILLE) நகரில் போராட்டக்காரர்களுக்கும், காவலர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

பிரான்ஸின் லியோன், நீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடந்த போராட்டத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. தலைநகர் பாரிஸில் இரவிலும் போராட்டம் நீடித்த நிலையில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் பிரான்ஸ் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

news18


 


Post a Comment

0 Comments