Ticker

6/recent/ticker-posts

ராணுவ அணுவகுப்புகளுக்கு பதிலாக, கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த வட கொரியா!


வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டத்தில், பிரமாண்ட ராணுவ அணிவகுப்புகளுக்குப் பதிலாகக் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் நிறுவன நாள் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக எளிய முறையில் கொண்டாடப்பட்டது. தலைநகர் பியாங்யாங்கில் எளிமையான முறையில் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்து பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தி மகிழ்ந்தனர். இரவு வானை வண்ணமயமாக்கும் வகையில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு தேசிய தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நாட்டின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட போதிலும், எந்தவித ராணுவ அணிவகுப்புகளும் இடம்பெறவில்லை. வழக்கமாக வட கொரியா தனது முக்கிய தேசிய தினங்களில் அதிநவீன ஆயுதங்களைக் காட்சிப்படுத்திப் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்புகளை நடத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments