
பிஹார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் செல்போன் திருடமுயன்ற நபரின் கைகளை ஜன்னல் வழியாக பயணிகள் பிடித்துக் கொண்டதால், ரயிலுக்கு வெளியே மரண பீதியுடன் தொங்கிய நிலையில் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சிவ்நாராயண்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது, ஜன்னல் வழியாகப் பயணி ஒருவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றார். இதையடுத்து, ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் விரைந்து செயல்பட்டு, மர்ம நபர் தப்பிச் செல்வதற்கு முன்பாக அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர். ரயில் நகரத் தொடங்கியபோதும் அவரை விடாமல் பிடித்திருந்ததால், அந்த நபர் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய நிலையில் இருந்தார்.
ரயில் வேகம் எடுக்கத் தொடங்கியதும், அந்த நபர் தன்னை விடுவித்துக் கொள்ள மரண பீதியுடன் போராடினார்.
சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த நபர், பின்னர் நடைமேடையில் விழுந்தார். அவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments