
ஹௌதி கிளர்ச்சிக் குழு சவுதி அரேபிய விமான நிலையம் மீது மீண்டும் நடத்திய தாக்குதலில் ஒருவர் மாண்டார்.
மேலும் 11 பேர் காயமுற்றனர்.
கிழக்கில் அமைந்துள்ள டம்மாம் (Dammam) அனைத்துலக விமானநிலையம் தாக்கப்பட்டதாக சவுதி அரேபியாவின் சிவில் விமானத் துறை ஆணையம் தெரிவித்தது.
சேதத்தை மதிப்பிடுவதாக அது சொன்னது.
ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழு சவுதி அரேபியாவில் நேற்று மற்றொரு விமான நிலையத்தைத் தாக்கியது.
13 பேர் மாண்டனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, சவுதி அரேபியாவுக்கும் ஏமனுக்கும் இடையே சமரசப் பேச்சு நடத்த தயாராய் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விமானங்கள் சவுதி அரேபியாவைக் கடக்கும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று அமெரிக்காவின் மத்திய விமானத் துறை நிர்வாக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பிரிட்டன் தனது குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments