Ticker

6/recent/ticker-posts

ஹோர்முஸில் கப்பல் தாக்குதல்கள் உச்சம் தொட்டது: அமைப்புகள்


ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) அல்லது அதற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்தது 10 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே போர் தொடங்கியதிலிருந்து பதிவான அதிக எண்ணிக்கைகளில் இதுவும் ஒன்று.

ஞாயிற்றுக்கிழமை ஆறு கப்பல்களும் செவ்வாய்க்கிழமை நான்கு கப்பல்களும் தாக்கப்பட்டன.

வான்கார்ட் (Vanguard), அனைத்துலக கடல் பாதுகாப்பு அமைப்பு (IMO), பிரிட்டனின் UKMTO அமைப்பு ஆகியவற்றின் தகவல்கள் அதனைத் தெரிவித்தன.

அண்மைய தாக்குதல்களில் இரு மாலுமிகளைக் காணவில்லை. கொள்கலன் கப்பல் ஒன்றும் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் தொடங்கியதிலிருந்து 23 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய கடல்வழிகளில் ஹோர்முஸ் நீரிணையும் ஒன்று. தாக்குதல்களால் அங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் தொடக்கத்தில் எரிசக்தி ஏற்றுமதி ஏறக்குறைய போருக்கு முந்தைய நிலைக்கு திரும்பியது. பின்னர் அது மீண்டும் குறைந்தது.

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நடந்த சம்பவங்களில் சுமார் 24 மாலுமிகள் உயிரிழந்ததாக IMO தெரிவித்தது.

seithi


 


Post a Comment

0 Comments