Ticker

6/recent/ticker-posts

சவூதி அரசுக்கு ஜனாதிபதி அநுர நன்றி


இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்யத் தீர்மானித்த சவூதி அரேபிய அரசுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளார்.

இந்தத் தீர்மானம் அனோஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கு தொடர்பில் அக்கறை கொண்டிருந்த இலங்கையர்கள் அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுமையான இராஜதந்திர நடவடிக்கைகள், நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைக்காகப் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட அயராத முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை எட்டுவதற்குப் பங்களித்த சவூதி அரேபிய மற்றும் இலங்கை இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

“வாழ்வாதாரத்தைத் தேடி தாய்நாட்டை விட்டு வெளியேறும் எந்தவொரு இலங்கையரும் ஒருபோதும் தனித்துவிடப்பட்டதாக உணரக்கூடாது” என்றும் ஜனாதிபதி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

tamilmirror


 


Post a Comment

0 Comments