Ticker

6/recent/ticker-posts

அக்குறணை கோர விபத்தில் உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியீடு…


கண்டி – மாத்தளை ஏ9 வீதியின் அக்குறணை, குருகொட சந்தியில் சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனம் பல வாகனங்கள் மீது மோதியதில் உயிரிழந்த நால்வரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண், அக்குறணையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் மற்றும் 28 வயதுடைய பெண், மாத்தளையைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஐவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பிரதி பணிப்பாளர் டாக்டர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சுமார் எட்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், 46 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

lankatruth


 


Post a Comment

0 Comments