
சீன உணவகங்களில் ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ் தயாரிக்கவும், காய்கறிகளை வதக்கவும், உணவுகளைத் தட்டுகளில் பரிமாறவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெய்ஜிங் நகரிலும் உணவு தயாரித்தல், பானங்களைப் பரிமாறுதல் உள்ளிட்ட பணிகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
Wow! A robot cooking noodles for us for breakfast at our hotel in Beijing! 🍜 https://t.co/48XsCfPA4h
— Attractions 360° (@SoCal360) October 21, 2026
சீனாவில் துரித உணவகங்கள் மற்றும் குறைந்த விலை உணவகங்களில் சமையல் ரோபோக்களின் பயன்பாடு 30 சதவீதத்தை எட்டியுள்ளது. வெப்பம் அதிகமுள்ள சூழலில் மேற்கொள்ளப்படும் கடினமான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை ரோபோக்கள் மேற்கொள்வதால், ஊழியர்கள் உணவின் சுவை மற்றும் செய்முறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடிவதாக உணவக உரிமையாளர்களின் கூறுகின்றனர். பள்ளி உணவகங்களிலும் அதிக அளவில் உணவு தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments