செயற்கை நுண்ணறிவின் ஆற்றலோடு ஓவியம் தீட்டும் இயந்திரக் கருவி...
அவ்வாறு தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக ஏலத்துக்கு வருகிறது.
ஐ-டா (Ai-Da) எனும் இயந்திரக் கருவி, "AI God" எனும் ஓவியத்தைத் தீட்டியது. அடுத்த மாதம் Sotheby's நிறுவனம் அதை ஏலத்தில் விற்பனை செய்கிறது.
ஆங்கில கணித மேதை ஆலன் துரிங்கைத் (Alan Turing) தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் படைப்பு அது.
2.2 மீட்டர் உயரத்தில் நிற்கும் ஓவியம், சுமார் 100,000 பவுண்டு முதல் 150,000 பவுண்டு வரை (சுமார் 170,000 வெள்ளி முதல் சுமார் 260,000 வெள்ளி வரை) விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓவியத்தைத் தீட்டிய ஐ-டாவுக்கு மனிதப் பெண்ணைப் போலவே முகம், பெரிய கண்கள், பழுப்பு நிறத் தலைமுடி ஆகியவை உள்ளன. உலகில் ஆக வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது அது.
இணையத்தில் நடக்கும் ஏலம், கலையும் தொழில்நுட்பமும் கைகோர்ப்பதைப் பிரதிபலிப்பதாக Sotheby's கூறியது.
seithi
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments