Ticker

6/recent/ticker-posts

Roller coaster சவாரியால் மூளைப் பாதிப்பு?


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரபல roller coaster சவாரி ஒன்று நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

காரணம்? அதில் சென்ற சிலருக்கு மூளைப் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்...

Six Flags Magic Mountain கேளிக்கைப் பூங்காவில் உள்ள X2 சவாரி சுமார் 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.

பல திருப்பங்கள் கொண்ட அந்தச் சவாரி மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

X2 சவாரி பற்றி ஏராளமான சட்டப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சென்ற ஜூலையில் X2 சவாரி சென்ற பெண்கள் இருவர் கடுமையாகக் காயமுற்றதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இருவருக்கும் அவசரமாக மூளை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் ஒருவர் இன்னும் பேச்சு மூச்சின்றி உள்ளார்.

2ஆவது சம்பவத்திற்குப் பின் அந்தச் சவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

தற்போது அது நிரந்தரமாக மூடப்படுவதாகக் கேளிக்கைப் பூங்காத் தலைவர் தெரிவித்தார்.

X2 சவாரி பலதரப்பட்ட பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்திருந்தாலும் அதை மூடுவதே சரியான முடிவு என்று அவர் சொன்னார்.

அந்தச் சவாரியால் பாதிக்கப்பட்டதாக 100க்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.

seithi


 


Post a Comment

0 Comments