
ஹோமாகம பொலிஸ் நிலையக் காவலில் இருந்தபோது உயிரிழந்த சந்தேகநபரின் மருத்துவ அறிக்கையில், அவருக்கு மூன்று விலா எலும்புகள் முறிந்திருந்ததுடன், மூளையிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமார, கடந்த 2026 ஒக்டோபர் 25ஆம் திகதி ஹோமாகம பொலிஸ் நிலையக் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், விசாரணைகளின்போது உயிரிழந்தவரின் தலையிலும் காயங்கள் காணப்பட்டமை தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர் முதலில் பொலிஸ் குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மருத்துவ அறிக்கையின் கண்டறிதல்களும், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகளும், இளைஞரின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தையும் சம்பவத்தின் பின்னணியையும் உறுதிப்படுத்துவதில் முக்கியமானவையாக இருக்கும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments