
குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
உள்ளம் அறிந்திடப் பொய்சொல்லாப் பண்பாளர் இவ்வுலகம் மெச்சவாழ் வார்.
குறன் 295:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
மனமறிய வாய்மை கடைப்பிடிப்போர் தானம் தவஞ்செய் தலினும் மேல்.
குறள் 296:
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.
பொய்சொல்லாப் பண்பு புகழ்மிக்க வாழ்வாம்! அவ்வாழ்வே நல்லறம் இங்கு
குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
பொய்களைப் பேசாமல் வாழ்வோன், அறங்களைச் செய்யாமல் விட்டாலும் நன்று.
குறள் 298:
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.
புறத்தூய்மை புறத்தூய்மை தண்ணீரால்! தண்ணீரால்! உள்ளமோ வாய்மை கடைப்பிடித்தால் தூய்மை பெறும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments