
இன்னா நாற்பது –39.
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல்.
விளக்கம்:
- பிறருக்கு கொடுக்க, பணம் இல்லாமல் இருப்பது வள்ளலுக்கு துன்பமாகும்.
- பாக்கைக் கடிக்கும் போது இடையில் சிறு கல் வந்துவிடுவது துன்பமாகும்.
- கவிஞருக்கு பரிசு கொடுக்க பொருள் இல்லாமல் போவது துன்பமாகும்.
- சிறு தடங்கலினால் பாடிக் கொண்டிருக்கும் பாடலை இடையில் நிறுத்தி விடுவது துன்பமாகும்.
இன்னா நாற்பது –40.
அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல்.
விளக்கம்:
- கட்டுப்பாட்டோடு வாழ்பவன் கர்வம் கொள்வது துன்பமாகும்.
- முயற்சி எதுவும் செய்யாதவன் காட்டும் தற்பெருமை துன்பமாகும்.
- பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுக்கப் பட்ட பொருளை ஒருவன் தனதாக்கிக் கொள்வது துன்பமாகும்.
- புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் துன்பமாகும்.
(முற்றும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments