Ticker

6/recent/ticker-posts

இந்திய – பாகிஸ்தான் மோதலுக்கு 8.4 மில்லியன் கோரிக்கைகள்


சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் குழுநிலைப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏறத்தாழ 8.4 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் திங்கட்கிழமை (02) தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க்கின் வன்டரேர்ஸின் மைதானத்தில் 2027 ஒக்டோபர் 10ஆம் திகதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள நிலையில், மைதானத்தில் 34,000 ஆசனங்களே காணப்படுகின்றன.

தொடரின் இறுதிப் போட்டியும் இதே மைதானத்திலேயே நடைபெறவுள்ள நிலையில் ஏறத்தாழ 8 மில்லியன் நுழைவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

தென்னாபிரிக்கா தவிர சிம்பாப்வே, நமீபியாவில் நடைபெறவுள்ள இத்தொடருக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பங்களை இம்மாதம் 21ஆம் திகதி விண்ணப்பிக்க முடியுமென்ற நிலையில், 193 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 3 மில்லியன் இரசிகர்களிடமிருந்து 120 மில்லியனுக்கும் அதிகமான மொத்த நுழைவுச்சீட்டு கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

tamilmirror


 


Post a Comment

0 Comments