
9.விருந்தோம்பல்
விருந்தினரை உபசரித்தல்
1.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
2.விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
3.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
4.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
5.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
6.செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
7.இனைத்துணைத் தென்பதொன் றில்லை
விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.
8.பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
9.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
10.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
9.விருந்தோம்பல்
விருந்தினரை உபசரித்தல்
1.குடும்ப வாழ்க்கை என்பது, நம்மிடம் வந்த விருந்தினரைப் போற்றி அவர்களுக்கு உதவி செய்வதுதான்.
2.சாவா மருந்து ஆனாலும், விருந்தினர் காத்திருக்கத் தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.
3.வரும் விருந்தினரை உபசரிப்பவன் வாழ்க்கை அழிவதில்லை.
4.மனமகிழ்வோடு விருந்தினரைப் போற்றுகின்றவர்களின் வீட்டில் திருமகள் மகிழ்வுடன் தங்கி இருப்பாள்.
5.விருந்தினரை உபசரித்து, மிஞ்சியதை உண்பவன் விளைநிலம் நன்கு விளையும்.
6.வந்தவரைப் பேணி வருபவர்களுக்காகக் காத்திருப்பவன் மேன்மையானவர்களுக்கு விருந்தாளியாவான்.
7.விருந்தளிப்பதின் பயனை அளவிட்டுக் கூற இயலாது. வரும் விருந்தினரின் தன்மையைப் பொறுத்துப் பயன் உண்டாகும்.
8.பொருளைப் பேணி, விருந்தினரை மதியாதவர்கள் பின்னர் சமுதாயம் தன்னை மதிக்கவில்லையென வருந்துவர்.
9.செல்வமிருந்தும் வறுமை எனக் கூறப்படுவது விருந்தினரைப் பேணாததே ஆகும். இத்தன்மை அறிவிலிகளிடமே இருக்கும்.
10.அனிச்சமலர் முகர்ந்த அளவில் வாடும். ஆனால், விருந்தினரோ முகம் சுளித்துப் பார்த்த அளவிலேயே வாடிவிடுவார்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments