Ticker

6/recent/ticker-posts

சிங்கப் பெண் சியமலா!


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அந்த காலை பரபரப்பாக இருந்தது.

மூன்று மாதங்களாக நடந்து கொண்டிருந்த குழந்தைகள் கடத்தல் வழக்கு , இன்னும் தீர்க்கப்படவில்லை.

“இந்தக் கேஸை விட்டுடலாம் சார்…
எந்த தடயமும் கிடைக்கவில்லை…”
என்று மூத்த அதிகாரி ஒருவர் சலிப்போடு சொன்னார்.

அந்த நேரம் கதவு திறந்து ஒரு பெண் அதிகாரி உள்ளே வந்தாள்.கடுமையான பார்வை.கண்ணில் நெருப்பு.
காக்கி உடையில் சிங்கத்தன்மை.அவள் — DSP சியமலா.

ஆனால் அந்த அலுவலகத்தில் எல்லாரும் அவளை மதித்தார்கள் என்று சொல்ல முடியாது.“பெண் அதிகாரியால் என்ன பெரிய சாதனை செய்ய முடியும்?”
“கோப்பை தூக்கி கையெழுத்து போடுறதுக்குத்தான் சரி…”இப்படிப்பட்ட அவமானங்கள் அவள் தினமும் கேட்டுக் கொண்டிருந்த வார்த்தைகள்.

ஆனால்…
சியமலா மௌனமாகவே இருந்தாள்.ஏனென்றால் அவளுக்கு தெரியும் ,ஒரு நாள் பதில் பேசுவது வாயல இல்லை சாதனையாள் தான்.

அந்த வழக்கில் கடத்தப்பட்ட குழந்தைகள் எல்லாம் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.ஆனால் எந்த CCTV-யிலும் குற்றவாளியின் முகம் இல்லை.

ஆண் அதிகாரிகள் எல்லோரும் பெரிய பெரிய கோணங்களில் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
சியமலா மட்டும் வேற மாதிரி யோசித்தாள்.

அவள் அந்தக் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அம்மாக்களோடு பேசினாள்.அவர்களின் பொம்மைகள், பள்ளிப்பைகள், வரைந்த படங்கள் — அனைத்தையும் பார்த்தாள்.

ஒரு குழந்தை வரைந்த ஓவியத்தில் ஒரு சிவப்பு நிற வேன் இருந்தது.அதன் மீது:“அபிராமி உணவகம்” என்று எழுதப்பட்டிருந்தது.

“இது சாதாரணமில்லை…”என்று சியமலா மனதில் நினைத்தாள்.

அடுத்த நாள் முதல்

அந்த மாவட்டத்தில் இருந்த அனைத்து “அபிராமி உணவகம்” வாகனங்களின் பட்டியலையும் எடுத்தாள்.

மூன்று வண்டிகள் மட்டும் பதிவு இல்லாமல் இயங்கியது தெரிய வந்தது.

அதைப் பற்றி கேட்டபோது,ஒரு ஆண் அதிகாரி சிரித்தான்.“இதுக்காகத்தானா இவ்வளவு டென்ஷன்?”
மற்றொருவன் கேலி செய்தான்.

“குழந்தை ஓவியம் பார்த்து கேஸ் முடிவு பண்ணப் போறாராம்!”அந்த சிரிப்புகள் அவளது மனதை குத்தின.
ஆனால் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

அந்த இரவு…
சியமலா தனியாகவே அந்த வண்டிகளைத் தேடி கிளம்பினாள்.மழை பெய்துக் கொண்டிருந்தது.நகர எல்லையைத் தாண்டி பழைய கிடங்கு ஒன்றருகே
சிவப்பு வேன் நின்றிருந்தது.

அவள் மெதுவாக அருகே சென்றாள்.
அந்த நேரம்,ஒரு இரும்புக் கம்பி அவள் தலையில் விழுந்தது!அவள் தரையில் விழுந்தாள்.

“பெண் போலீஸ்னு நினைச்சு நாங்க பயப்படுவோமா?”
என்று ஒருவர் காலால் உதைத்தான்.ரத்தம் வழிந்தது.

ஆனால்…

அந்த கிடங்குக்குள் இருந்து குழந்தை அழுகை கேட்டது.

அந்த சத்தம் கேட்டவுடன் சியமலா மீண்டும் எழுந்தாள்.
கண்ணில் வலி இல்லை.கோபம் மட்டும் இருந்தது.
ஒரே அடியில் ஒருவனை தள்ளி வீழ்த்தினாள்.

மற்றொருவனின் கையை முறித்தாள்.உடம்பு முழுக்க காயம் இருந்தாலும் அவள் போராடினாள்.

இறுதியில்,
ஐந்து குழந்தைகளையும் உயிரோடு மீட்டாள்.அடுத்த நாள் செய்தித்தாள்களின் முதல் பக்கம் முழுக்க:
“சிங்கப் பெண் சியமலா!”என்று தலைப்பு வந்தது.

அவளை கேலி செய்த அதிகாரிகள் இப்போது தலைகுனிந்து நின்றார்கள்.மாநில முதல்வர் நேரில் பாராட்டு வழங்கினார்.ஆனால் மேடையில் பேசும்போதுசியமலா சொன்ன ஒரு வரி அங்கே இருந்த எல்லாரையும் அமைதியாக்கியது.

“பெண்ணை பலவீனம்னு நினைக்கிற ஒவ்வொரு சமுதாயமும் ஒருநாள் அவளால்தான் காப்பாற்றப்படும்…”
அந்த நாளிலிருந்து அந்த மாவட்டத்தில் ஒரு பெண் அதிகாரியை யாரும் குறைத்து மதிக்கவில்லை.

ஏனென்றால்…அங்கே ஒரு சிங்கப் பெண் வாழ்ந்தாள்.

தளவாய் சாந்தா

 


Post a Comment

0 Comments