Ticker

6/recent/ticker-posts

"ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை!" – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை


ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையவில்லை என்றும், அந்நாடு மீண்டும் அணுஆயுதங்களைப் பெற முயற்சிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் அவர் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "ஈரான் தொடர்பான எங்கள் பணி இன்னும் முழுமை பெறவில்லை. ஈரான் மீண்டும் அணுஆயுதங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. இது இஸ்ரேல் நாட்டிற்கு மிகவும் தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்று கூறினார்.

கடந்த ஆண்டிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரான் ஆளாகியிருந்தபோதிலும், ஈரான் தொடர்ந்து அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு  திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கடந்த சில வாரங்களாக ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் எனத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இருப்பினும், அவரது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு முழு ஆதரவு அளிப்பாரா என்பதில் தெளிற்ற சூழல் நிலவுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்கள் போர் சூழல் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியதும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, அக்டோபர் 27 இஸ்ரேலியத் தேர்தலுக்குச் சற்று முன்பாக ஈரான் மீது ஒரு முக்கிய ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள நெதன்யாஹு மற்றும் மொசாட் உளவுத்துறை முயன்றதாகவும், ஆனால் அமெரிக்கா தலையிட்டு அதைத் தடுத்ததாகவும் இஸ்ரேலின் 'சேனல் 12' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments