Ticker

6/recent/ticker-posts

என்னது... கனவையும் வீடியோவா பார்க்கலாமா? உலகையே மிரள வைத்த புதிய ஏஐ!


செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வரவு, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அனைத்து துறைகளிலும் கால்தடம் பதித்து வரும் ஏஐ தொழில்நுட்பம், மொபைல்போனில் பயன்படுத்தும் வசதியும் வந்து விட்டது. மனிதர்களின் நேரத்தை மிச்சப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட ஏஐ, தற்போது மனிதர்களின் வேலையையே பறித்துக் கொண்டிருக்கிறது.

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்காக, ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அதற்கேற்ப ஏஐ துறையும் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்நிலையில் தூக்கத்தில் நாம் காணும் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் புதிய ஏஐ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கத்தில் நாம் கண்ட கனவுகளை கண்விழித்தவுடன் வீடியோவாக பார்க்கலாம். தூக்கத்தில் தோன்றும் கனவுகளை மறு உருவாக்கம் செய்து திரையில் காட்டும் ‘Sleep Interpreter’ ஏஐ தொழில்நுட்பம், நரம்பியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகும்.

பொதுவாக தூக்கத்தில் வரும் கனவை பலரும் நினைவில் வைத்துக் கொள்வதே கடினம். அப்படியே கனவுகள் நினைவுக்கு வந்தாலும், அதில் பாதி காட்சிகள் மறந்து விடும். அரைகுறையாகவே நமக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் நாம் கண்ட கனவை நிஜமாக்கும் வகையில் வீடியோவாக பார்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! நம்பித் தான் ஆக வேண்டும். ஏனெனில் ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு எதுவும் சாத்தியமே என்ற சூழல் உருவாகி விட்டது.

பல மணி நேரம் கணினியில் செய்ய வேண்டிய டிசைன்கள் மற்றும் வேலைகளை நொடிப் பொழுதில் முடித்து விடுகிறது ஏஐ. உலகளவில் தனிமையில் இருக்கும் பலரும் ஏஐ தொழில்நுட்பத்தை தனது உற்ற நண்பராகவே நினைத்து சாட் செய்து வருகின்றனர். இந்நிலையில் கனவில் வரும் காட்சிகளைக் கூட நேரில் பார்க்க வைக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்ட ‘Sleep Interpreter’ என்ற புதிய ஏஐ உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயல்படும் விதம்:

ஹெட்செட் வடிவத்தில் இருக்கும் Sleep Interpreter ஏஐ சாதனத்தை தலையில் மாட்டிக் கொண்டு தூங்க வேண்டும். தூக்கத்தில் வரும் கனவுகளை மூளையில் இருந்து வரும் சிக்னல்கள் காட்சிப் படமாக உருவாக்கும்.

ஏஐ தொழில்நுட்பம், fMRI மூளை அலை ஸ்கேனிங் மற்றும் ஜெனரேட்டிவ் விஷுவல் மாடல்களை ஒன்றிணைத்து, தூக்கத்தின் போது மனித மூளையின் விசுவல் கார்டெக்ஸ் பகுதியில் தூண்டப்படும் நரம்பியல் சிக்னல்கள் டிகோட் செய்யப்பட்டு படங்களாகவும், வீடியோ துணுக்குகளாகவும் மாற்றும் முயற்சி இது.

ஒரு சிலருக்கு மட்டும் கனவில் வரும் நிகழ்வுகள் நிஜத்தில் பலிப்பதுண்டு. ஆனால் கனவில் வரும் காட்சிகளை அப்படியே பார்க்க முடியும் என்ற சூழல் உருவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில், கனவுகளை வீடியோவாக பார்க்க உதவும் ஏஐ சாதனம் உருவாக்கப்பட்டிருப்பது விசித்திர சாதனை தான்.

இருப்பினும் நமக்கு தெரிந்த முகங்கள் கனவில் வந்தால், அவர்களை ஏஐ தொழில்நுட்பத்தால் காட்சிப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தத் தொழில்நுட்பம் இப்போது தான் உருவாக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்தத் தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றம் அடைந்தால், இதுவும் சாத்தியமாக வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது

kalkionline


 


Post a Comment

0 Comments