Ticker

6/recent/ticker-posts

டிரம்பை ஆட்டம் காணச் செய்த அமெரிக்க தேர்தல்: பிரதிநிதிகள் அவையில் முதல் கருப்பின அவைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ்


அமெரிக்க  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் முக்கியத்துவமான இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 

வாக்குப்பதிவைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டு, முடிவுகள் நேற்று வெளியாகின.

இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா கடந்த பிப்ரவரியில் தொடங்கிய ஈரான் போரினால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் நீடித்த எரிபொருள், அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வால், மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியின் எதிரொலியாக, தேர்தல் முடிவுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் டிரம்பின் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பல இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

அதிபர் டிரம்ப் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள இத்தேர்தலில் இருகட்சி வேட்பாளர்களாலும் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

முதல் கருப்பின ஆளுநர்கள்

ஜார்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில், 1998-க்குப் பிறகு ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் 54.31 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சியின்  வேட்பாளர் ரிக் ஜாக்சனை தோற்கடித்துள்ளார். ரிக் அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர். 

அமெரிக்க வரலாற்றில் ஆளுநராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் கீஷா லான்ஸ்.

முதல் கருப்பின அவைத் தலைவர்

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், அக்கட்சி சார்பில் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் முதல் கருப்பின அவைத் தலைவராக பொறுப்பேற்பார்.

மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல் சயீத், செனட் அவைக்குத் தேர்வாகும் முதல் முஸ்லிம் எனும் பெருமையைப் பெற்றார்.

கன்சாஸில் 1932-க்குப் பிறகு...

கன்சாஸ் செனட் தேர்தலில் 90 ஆண்டுகால குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகக் கட்சியின் ஆடம் ஹமில்டன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 

கடந்த 1932-க்குப் பிறகு முதல்முறையாக கன்சாஸ் மாகாணத்தில் இருந்து ஒரு ஜனநாயகக் கட்சி செனட்டர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

nambikkai


 


Post a Comment

0 Comments