ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?


ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் உலகிற்கு உங்களை வரவேற்கிறேன். இப்போது ஒரு மெஷினை புரோகிராம் செய்து குறிப்பிட்ட வேலையை செய்திட வைக்க முடிவதோடு நின்றுவிடாமல், குறிப்பிட்ட மெசினை கற்றுக்கொள்ள வைக்கலாம், தரவுகளை பொறுத்து முடிவுகளை அவைகளே எடுக்கும்படி செய்யலாம்.

 
ஒருகாலத்தில், இதெல்லாம் சாத்தியமே இல்லாத விசயம் என மனிதர்களால் நம்பப்பட்டு வந்த விசயம் இப்போது உண்மையாகி உள்ளது.  அதுதான் Artificial Intelligence.

இந்தப்பதிவில், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்றால் என்ன [Artificial Intelligence in Tamil], ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றி மிக விரிவாக பார்க்கலாம். மெஷின் லேர்னிங் துவங்கி நியூரல் நெட்ஒர்க்ஸ் வரைக்கும் பல்வேறு விசயங்களை இங்கே நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்தக்கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும்போது AI பற்றி முழுவதுமாக நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல, AI ஆல் என்ன செய்திட முடியும், என்ன செய்திட முடியாது என்பதை தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் தயாரா?

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது மனித நுண்ணறிவு தேவைப்படும் ஒரு வேலையை செய்து முடிக்கிற அளவிற்கான மேம்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் சிஸ்டம் ஐ உருவாக்குவது தான். அது, பிரச்சனையை சரி செய்வது, முடிவுகளை எடுப்பது, கற்றுக்கொள்வது, பேசுவதை புரிந்துகொள்வது என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மிக அதிக அளவிலான தரவுகளை உள்ளீடாக கொடுப்பதன் மூலமாக மனிதர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளைப்போலவே AI சிஸ்டம் களால் எடுக்க முடியும். 

AI ஆனது முக்கியமாக மூன்று தொழில்நுட்பங்களை இணைத்து செயல்படுகிறது. அது, machine learning, natural language processing, மற்றும் computer vision ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. AI சிறப்பாக செயல்படுவதற்கு machine learning மிகவும் அதிக அளவில் பயன்படுகிறது. மிக அதிக அளவிலான தரவுகளை ஆராய்வதன் மூலமாக, குறிப்பிட்ட பேட்டர்ன்ஸ் ஐ கண்டறிவது, மனிதர்களைப்போலவே அதில் இருந்து முடிவுகளை எடுப்பது என பல்வேறு விசயங்களை AI சிறப்பாக செய்திட machine learning பயன்படுகிறது. 

AI இல் இருக்கக்கூடிய அடுத்த முக்கியமான அமைப்பு neural networks. இது மனிதர்களின் மூளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் ஆர்டிபிஷியல் நியூரான்ஸ் மற்றும் நோட்ஸ் உதவியினால் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. இவை தானாகவே கற்றுக்கொள்ளும் திறன் படைத்தவை. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக தரவுகள் கொடுக்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு மிகவும் துல்லியமாக இவை முடிவுகளை எடுக்கும். 

ஒரு கணினியோ அல்லது மெஷினோ மனிதர்களைப்போலவே முடிவுகளை எடுப்பதில் செயல்பட்டால் அது தான் AI. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த தொழில்நுட்பம் இப்போது சாத்தியமாகியுள்ளது. 

Types of AI: Narrow AI vs. General AI

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் நிச்சயமாக Narrow AI மற்றும் General AI க்கு இடையிலான வேறுபாட்டை தெரிந்துகொள்வது அவசியம். Narrow AI என்பதை weak AI என்றும் சொல்லுவார்கள். இது எதனால் என்றால் இந்தவகை AI ஆல் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டுமே சிறப்பாக செய்திட முடியும். இதனால் தன்னுடைய அறிவினை மற்ற AI சிஸ்டம்களோடு பகிர்ந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு, speech recognition systems, recommendation algorithms, மற்றும் autonomous vehicles ஐ இதற்கு உதாரணமாக சொல்லலாம். 

மற்றொன்று General AI, இது சக்தி வாய்ந்த AI ஆக பார்க்கப்படுகிறது. இந்தவகை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் புரோகிராம்களால் விசயங்களை புரிந்துகொள்ள முடியும், கற்றுக்கொள்ள முடியும், தான் கற்றதை பல்வேறு விசயங்களுக்கு பகிர முடியும். மனிதர்களின் நுண்ணறிவைப்போலவே General AI ஐ உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

நமது நன்றாக வாழ்வில் ஏற்கனவே AI தொழில்நுட்பங்களின் பயன்பாடு வந்துவிட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுக்கு கூறுகிறேன்.

Virtual Assistants

இது வேறொன்றும் இல்லை. ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்படும் Siri, கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சா போன்றவை அனைத்துமே AI புரோகிராம்களால் வடிவமைக்கப்பட்டவை தான். மனிதர்கள் பேசுவதை புரிந்துகொண்டு அதற்கேற்ப வேலைகளை இவை செய்திடும். natural language processing (NLP) என்ற புரோகிராம் இதில் பயன்படுத்தப்படுகிறது. 

இந்தவகை AI மூலமாக  கேள்விகளை கேட்டு பதில்களை பெற முடியும், விரும்பிய பாடல்களை ஒலிக்க செய்திட முடியும், காலெண்டர் ஐ அப்டேட் செய்திட முடியும். இப்படி பல வேலைகளை செய்திட முடியும்.

Autonomous Vehicles

இப்போதைக்கு நம்மிடையே இருக்கும் மிகவும் பிரபல்யமான AI என்னவென்றால் தானியங்கி வாகனங்கள் தான். கேமரா, சென்சார் ஆகியவற்றை பயன்படுத்தி சாலையில் முடிவுகளை எடுக்கும் ஒரு சிக்கலான பணியினை இந்த AI செய்கிறது. இதற்காக, எதிரே இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஸ்கேன் செய்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, அந்த முடிவுகள் ஒவ்வொன்றையும் நொடிக்கும் குறைவான நேரத்தில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதோ கதிதான்.

The history and evolution of AI

AI உருவாக்கம் குறித்து நீண்ட காலமாகவே முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அண்மைய சில ஆண்டுகளில் தான் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் AI உருவாக்கத்தில் நடந்துள்ளது. இங்கே AI கண்டுபிடிப்பின் வரலாறு குறித்து பார்க்கலாம்.

Dartmouth Workshop and the Birth of AI

Dartmouth கருத்தரங்கில் தான் AI என்ற ஒரு இருப்பதே கண்டுகொள்ளப்பட்டது. இது நடந்தது 1956 இல். ஜான் மெக்கார்த்தி, மார்வின் மின்ஸ்கி, நதானியேல் ரோசெஸ்டர் மற்றும் கிளாட் ஷானன் ஆகிய நால்வரும் தான் இந்த கருத்தரங்கை நடத்தினார்கள். அங்கே அவர்கள், மனிதர்களின் நுண்ணறிவைப்போலவே செயற்கையான நுண்ணறிவை பயன்படுத்தி வேலைகளை செய்திடும் மெஷின்கள் குறித்து கலந்துரையாடினார்கள். இது தான் AI உருவாக்கத்தின் துவக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

The Rise of Machine Learning and Neural Networks

அதன் பிறகு, AI ஆராய்ச்சிக்கு செய்யப்படும் முதலீடு என்பது குறைந்துவிட்டது. குறிப்பாக, 1970 – 1980 காலகட்டங்களில் இதில் பெரிதாக முதலீடு செய்யப்படவில்லை. 

1990 மற்றும் 2000 இன் துவக்க காலங்களில் மீண்டும் AI கண்டுபிடிப்பு சூடுபிடிக்கத் துவங்கியது. குறிப்பாக இந்த காலகட்டங்களில் தான் Machine Learning மற்றும் Neural Networks குறித்தான பெரிய தாக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தது மாதிரியான முன்னேற்றத்தை கொடுத்தது. இது AI க்கு அனைவரையும் இழுத்து வந்தது.

Future Of AI

இப்போதைய காலகட்டத்தில், AI பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை ஆற்றத் துவங்கிவிட்டது. குறிப்பாக, சுகாதாரம், நிதி, போக்குவரத்து மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் இதன் பங்கு அதிகரித்துள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் துவங்கி தானியங்கி வாகனங்கள் வரைக்கும் AI பயன்படுத்தப்படுகிறது. இன்னும் AI பல்வேறு துறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

இன்னும் எதிர்காலத்தில் சிக்கலான பல வேலைகளை வேகமாகவும் சரியாகவும் செய்து முடிக்க AI அதிகமாக பயன்படுத்தப்படலாம்.

AI குறித்தான எதிர்மறை கருத்துக்கள்
வேலைவாய்ப்பு

ஒருபுறம் AI ஆல் நன்மைகள் பல ஏற்பட்டாலும் அந்த வேலையை முன்பு செய்து கொண்டிருந்தவரின் வேலையை AI பறித்துவிடுகிறது என்பதையும் நாம் மறக்க கூடாது. உதாரணத்திற்கு, Content எழுதுவதற்கு chat gpt போன்றவை வந்தபிறகு Content Writer வேலைவாய்ப்புகளை பலர் இழந்தது நினைவு இருக்கலாம். இப்படி ஒவ்வொரு வேலையும் பறிபோகும் போது அது சமூக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

தகவல் பாதுகாப்பு

AI சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக அதிகப்படியான தகவல்கள் அதற்கு வழங்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. மக்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்கும் போது மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது அவசியம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

SOURCE:TECH TAMILAN


 



Post a Comment

Previous Post Next Post