
கண்ணுக்குள் ஒரு
காதல் உருவாக்கியவளே
கனிந்து பழம்
பறிக்கும் முன்பாகவே
பிரிந்து செல்வது
நியாயமோ என்னவளே
மண்ணுக்கு இரையாகி
விண்ணுக்கு விரைந்தாலும்
பெண்ணுக்கு கொடுமை
இளைத்திடாது என்னிதயம்
நுண்ணங்கி போல்
உள்ளம் நுழைந்தவளே
நன்னாரி வேராகவே
என்னுயிர் பற்றியவளே
தண்ணீரும் கண்ணீரும்
அருந்திடும் விழிகளும்
சொந்தமென வந்திடு
வாழ்க்கையைக் காத்திடு
குற்றுயிரும் கொலயுயிருமாய்
தத்தளிக்கிறது ஆத்மாவுக்
விடுதலை கொடுத்திடு
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments