Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 19


இன்னா நாற்பது -35. 

எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல்.

விளக்கம்:
  • மேகம் மழையைப் பெய்யவில்லை என்றால், மக்களுக்கு துன்பமாகும். 
  • புல்லாங்குழலாகி, இன்னிசை தரவேண்டிய மூங்கில், ஒன்றோடொன்று உரசி எழுப்பும் ஓசை துன்பமாகும். 
  • குழந்தைகளுக்கு வரும் நோய் துன்பமாகும். 
  • அழகுள்ளவர்கள், அறிவிலிகளாக இருப்பது துன்பமாகும்.

இன்னா நாற்பது -36. 

பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை ன்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு.

விளக்கம்:
  • ஏழைகள் மற்றவர்களுக்கு உதவி புரிய நினைப்பது துன்பமாகும். 
  • மாளிகைகள் இருந்தும், அவற்றில் வாழாமல் இருப்பது துன்பமாகும். 
  • உணவளிப்பவருக்காககா பசியோடு காத்திருப்பது துன்பமாகும். 
  • நமக்கு வரும் சோதனைக் காலத்தில், நண்பர்கள் நம்மை விட்டுப் போய்  விடுவது துன்பமாகும்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments