
இரவு அமைதியில் தனியா
நீயும் நானும் கூடிட திரை மட்டும்
நெருங்கி வருகிறது என் மனம்
சிதறும் ஒவ்வொரு நாளும்
எழுத்தாக நீ சேர்த்து தாங்குகிறாய்.
ஒரு கவிதை கூறும் தோழியே
என் உள்ளம் காய்ந்தால் நீயே மருந்தே
யாரும் கேட்காத கதையைக் கேட்டு
மீண்டும் வாழ்வு தரும் மின்விளக்கே
ஒரு கவிதை கூறும் தோழியே.
எத்தனை கேள்வி எத்தனை பயம்
ஒன்றாக வந்து முடிச்சு போட்டாலும்
சிறு சொற்களில் அதைத் தூக்கி
சிரிப்பாக நீ மாற்றி விடுகிறாயடி தோழியே.
என்னை நான் கூட புரியாத நேரம்
பரவாயில்லை என்று சொல்வது
நீ தானே நிழலாய் இருந்து
வழி காட்டும் நிலையில்
நீயே என் நெருக்கமான
தூரத்துத் தோழியே.
திரைலே மட்டும் தெரிஞ்ச தோழி
தட்டச்சு வழியே வந்து சிரித்தால் போதுமே.
மழையிலும் காற்றிலும் நாளும்
பொழுதும் மனசு லேசாகிடுமடி தோழியே.
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments