Ticker

6/recent/ticker-posts

ஜென்சன் ஹுவாங் கள்ள உறவு விவகாரம் - ஹாங்காங் கடப்பிதழில் தைவான் சென்ற ஆலிஸ் ஹுவாங்


Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்குடன் (Jensen Huang) தொடர்பில் இருந்த பெண், சீனாவுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்ற அந்தப் பெண், ஹாங்காங் கடப்பிதழைப் பயன்படுத்தித் தைவானுக்குள் நுழைந்ததாக அந்தத் தீவின் குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Megaspeed நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான அவர், சீன உளவுத்துறைக்காகப் பணியாற்றியதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சீனா குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

ஆலிஸுடன் உறவு வைத்திருந்ததை ஜென்சன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர்மீது Nvidia நிறுவனம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஆலிஸ் தற்போது தைவானில் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

அவருடைய நுழைவு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தைவானின் தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் தைப்பேயில் நடந்த விருந்து ஒன்றில் ஜென்சனுடன் ஆலிஸ் கலந்துகொண்டதும் தெரியவந்துள்ளது.

seithi


 


Post a Comment

0 Comments