
உம்மாவின் கருவாட்டுக் குழம்பு
மட்டன் பிரியாணியின்
வாசனையும் மிஞ்சி இழுத்துடும்...
அது துணை மசாலா
தூளின் வாசனை தான்...
கருவாட்டுடன் சேர்ந்த
ருசியைத் தூண்டும் வாசனையே...
உம்மா கை பட்ட
குழம்பும் சோறும் தானே...
நிம்மதியான பசி
தீர்த்த அந்த நாட்கள்...
அன்று பசியின் தீர்வும்
மன நிம்மதியும்...
இன்று பசிக்கு தேடிடும்
அலங்கார உணவகமும்...
சோம்பல் பெண்களின்
கைவண்ணங்கள்
மங்கி தான் கிடக்கின்றன...
AI-யின் விளம்பரக்
கண்காட்சிகளின் தூண்டுதலும்...
பெண்களை சோம்பேறி
பிணமாக கிடக்க வைக்கையிலே...
அடுப்பங்கரையில் பாழ்
விழுந்த கதை தானே கண்டீர்...
கருவாடும் காய வைக்க
இயற்கை சூடு தேடாத இக்காலம் தான்...
மின்சாரத்தால் சூடாகி காய்வதனால்...
கருவாட்டுக் குழம்பு
வைத்தால் வாசனையும் போச்சுது...
உம்மாவின் சமையலுக்கும்
ஈடு கொடுக்க முடியாதுண்டு...
முட்டைக் கண்ணையும் சிறுத்து விட்டு...
உதட்டையும் வாயையும் சப்பி விட்டு...
கொட்டாவி விட்ட கதை யாரறிவா..
சேகு பரீத்கா
ஏறாவூர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments