
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல இடங்களில் படுதோல்வியை அடைந்து பெரும்பான்மையை இழந்திருக்கிறது டிரம்ப்பின் கட்சி. இதனால் இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
நடந்து முடிந்த அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி செனட் சபையில் 53 இடங்களிலும், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 220 இடங்களும் வெற்றி பெற்றுள்ளன. இவற்றில் செனட் சபையில் பெரும்பான்மைக்கு 51-தான் தேவை. அதேபோல பிரதிநிதிகள் சபையில் 218 என்பதுதான் பெரும்பான்மைக்கான தேவை. இரண்டையுமே, ஜனநாயகக் கட்சி பெற்றுவிட்டது.
இரண்டிலுமே பெரும்பான்மையை பெற்றாலும், செனட் சபையில் பெறப்பட்டுள்ள வெற்றிதான் மிகமிக முக்கியமானது. அது ஏன், டிரம்ப் கட்சியின் இந்த பின்னடைவால் இந்தியர்களுக்கு என்ன பலன் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் செனட் சபை வெற்றி ஏன் முக்கியமானது என பார்க்கலாம். செனட் சபையில் யார் கை ஓங்கி இருக்கிறதோ, அவர்களின் கையே சட்ட நடவடிக்கைகளில் ஓங்கி இருக்கும். பொதுவாக அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனி அரசும் சட்டங்களும் உள்ளன. இதற்கு கருக்கலைப்புச் சட்டமே சிறந்த உதாரணம். 2022-ல் உச்சநீதிமன்றம் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அங்கீகரித்திருந்த முந்தைய தீர்ப்பை ரத்து செய்த பிறகு, ஒவ்வொரு மாகாணமும் தங்களது விருப்பத்திற்கேற்ப கருக்கலைப்புச் சட்டங்களைக் கொண்டு வந்தன. இதனால் மாகாணங்களுக்கு இடையே சட்டங்களில் வேறுபாடுகள் ஏற்பட்டன. எனினும், மாகாணச் சட்டங்கள் அமெரிக்க அரசியலமைப்புக்கும் கூட்டாட்சி சட்டங்களுக்கும் உட்பட்டவையே. அவற்றுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, இறுதியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும்.
இந்த அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியை நியமிக்கும் பொறுப்பு, செனட் சபையின் கீழ்தான் வரும். அதனால் இனி ஜனநாயக கட்சியால் சட்ட ரீதியாக ஓங்கி இருக்க முடியும். நீதிபதியின் அதிகாரங்களை இவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், தங்களின் கொள்கையோடு ஒத்துப்போகும் நீதிபதிகளை இவர்களால் பணியமர்த்த முடியும். பொதுவாக அதிபரின் கட்சியே செனட் சபையில் பெரும்பான்மையாக இருக்கும் என்பதால், அதிபரிடம் இந்த அதிகாரத்தை செனட் சபை உறுப்பினர்கள் கொடுத்துவிடுவர். இனி அது நடக்காது. அதிகாரத்தை ஜனநாயக கட்சி உறுப்பினர்களே வைத்துக்கொள்வர்.
குறிப்பு: செனட் சபையில் பெரும்பான்மை கிடைப்பது சட்டமியற்றும் அதிகாரத்தில் முக்கியமானது. ஆனால், அது மட்டுமே அமெரிக்காவின் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்காது; பிரதிநிதிகள் சபை, அதிபர் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன.
சரி, இந்த பெரும்பான்மையின் மூலம் இனி என்ன நடக்கும்? அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கைகளை இவர்களால் தொடங்க முடியும். அதேபோல செலவினங்கள், நிதி தொடர்பான முடிவுகள், போர் தொடர்பான முடிவுகள், வரிகள், ஹெச்.1.பி. விசா தொடர்பான முடிவுகள் போன்றவற்றுக்கு எல்லாம், அதிபர் டிரம்ப் இனி செனட் சபை உறுப்பினர்களை நாட வேண்டி இருக்கும். சுருக்கமாக சொன்னால், டிரம்ப்தான் அமெரிக்க அதிபர் என்றாலும், அவரால் இனி அதிரடி முடிவுகளை எடுக்க முடியாது. ஜனநாயக கட்சியினர் அதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவர்.
இதனால் இந்தியாவிற்கு என்ன பலன்? உண்மையில் இந்தியாவுக்குச் சில சாதகமான வாய்ப்புகளை உருவாக்கலாம். குறிப்பாக, இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள், வர்த்தக ஒப்பந்தம், H-1B விசா கட்டுப்பாடுகள் மற்றும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான குடியேற்ற விதிகள் தொடர்பாக டிரம்ப் அரசின் முடிவுகளை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
மேலும், இந்தியா மீதான வர்த்தக அழுத்தம் மற்றும் ரஷ்யாவுடனான உறவு தொடர்பான அமெரிக்காவின் நெருக்கடிகளும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரலாம். இருப்பினும், வெளியுறவுக் கொள்கை மற்றும் விசா நடைமுறைகளில் அதிபர் டிரம்புக்கு இன்னும் கணிசமான அதிகாரம் இருப்பதால், இந்த வெற்றி இந்தியாவுக்கு உடனடி சலுகைகளை உறுதி செய்யாது; மாறாக, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச முடிவுகளைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பையே அதிகரிக்கிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments