நெஞ்செரிச்சல் இருக்கும்போது பூண்டு சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா?

நெஞ்செரிச்சல் இருக்கும்போது பூண்டு சாப்பிடக்கூடாது... ஏன் தெரியுமா?


கடுமையான நெஞ்செரிச்சல் பிரச்சினை உடையவர்கள் உணவில் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.

குறிப்பாக பூண்டை பச்சையாக எடுத்துக் கொள்பவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்க நெஞ்செரிச்சலை மேலும் மோசமாக்க வாய்ப்பு உள்ளது. 

ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது கீழ் மார்பு பகுதியில் எரியும் உணர்வை ஏற்படுத்தும் நிலை ஆகும். வயிற்று அமிலம் உணவுக் குழாயில் பின்னோக்கி பாயும் போது இது நிகழ்கிறது.

சில உணவுகள் அமில ரிஃப்ளக்ஸ்யை மோசமாக்கி விளைவுகளை மோசமாக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்சினை இருந்தால் பூண்டு சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  

பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்றாலும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.

நெஞ்செரிச்சல் என்பது நபருக்கு நபர் வேறுபடலாம். எனவே பூண்டை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற அர்த்தம் அல்ல.

ஏனெனில் பூண்டில் சில நன்மைகளும் இருக்கிறது. பூண்டு உங்க கொழுப்பை குறைக்கவும் புற்றுநோயில் இருந்து உங்களை காப்பாற்றவும் உதவுகிறது.

சில வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் மருந்து வடிவத்தில் பூண்டு எடுத்துக் கொள்வது நெஞ்செரிச்சலைப் போக்கவும், செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்தவும் அமிலத்தன்மையை ஆற்றவும் உதவும் என்று கூறுகிறார்கள்.

பூண்டுக்கு நிறைய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் 90 சதவிகித நெஞ்செரிச்சல் நோய்களுக்கு காரணமான எச்.பிலோரி பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது.

இந்த மாதிரியும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பச்சையாக பூண்டு பற்களை எடுத்துக் கொள்வது நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் அசெளகரியம் போன்ற அமிலத்தன்மையின் அறிகுறிகளிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே பூண்டு நெஞ்செரிச்சலை ஏற்படுத்துமா என்பதற்கு சில முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருகிறது.

எந்த வடிவத்திலும் பூண்டை உட்கொண்ட பிறகு கடுமையான நெஞ்செரிச்சல் அல்லது அசெளகரியம் ஏற்பட்டால், அதை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சிலருக்கு பச்சை பூண்டு அமிலத்தன்மை தூண்டுதலாக இருக்கும். நீங்கள் சாப்பிடுவது உங்கள் வயிறு உற்பத்தி செய்யும் அமிலத்தின் அளவை தீர்மானிக்கிறது.

எனவே, அமில ரிஃப்ளக்ஸைத் தடுக்க அல்லது எதிர்த்துப் போராட உங்கள் உணவைக் கண்காணிப்பது முக்கியம்.
தொகுப்பு;சுபைதா

Post a Comment

Previous Post Next Post