Ticker

6/recent/ticker-posts

35 ஆண்டுகள் காத்திருந்து 65 வயது காதலியை திருமணம் செய்து கொண்ட முதியவர்



இந்தியாவில் முதியவர் ஒருவர் 35 ஆண்டுகள் காத்திருந்து 65 வயது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கர்நாடகா மாநிலம், மைசூரு அருகே உள்ள ஹெப்பாளாவை சேர்ந்தவர் ஜெயம்மா. 65 வயது மதிக்கத்தக்க இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இல்லாததால், 30 வயதிலே இவரை கணவர் விட்டு சென்று விட்டார்.

இதற்கிடையில், ஜெயம்மாவை, இதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா, என்பவர் காதலித்து வந்துள்ளார். இதை ஜெயம்மா ஏற்கவில்லை. ஆனால் அவரையே நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து இருந்துள்ளார்.

சுமார் இப்படியே 35 ஆண்டுகல் கழிந்த நிலையில், தற்போது சிக்கண்ணாவை, திருமணம் செய்ய சம்மதித்துள்ளது.



இதையடுத்து இருவருக்கும் மாண்டியா மேலுகோட்டே செலுவராயசுவாமி கோவில் முன்னுள்ள சீனிவாஸ் குருஜி ஆஸ்ரமத்தில் திருமணம் நடந்தது.

இவர்களின் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அவர்களை வாழ்த்தினர். மேலும் இணையவாதிகள் தங்களுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும்...இலங்கை  செய்திகள் 
மேலும்...இந்தியா  செய்திகள் 
மேலும்...உலக  செய்திகள் 
மேலும்..விளையாட்டு செய்திகள் 




Post a Comment

0 Comments