சிட்னியில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டது.

சிட்னியில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நிலையில், சகல விதமான கிரிக்கெட் போட்களிலுமிருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை கிரிக்கெட், உடன் நடைமுறையாகும் வகையில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

அத்துடன், அவரை எந்த தெரிவின் போதும் கவனத்தில் கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தனுஷ்க குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலியல் குற்றச்சாட்டில் சிட்னியில் கைதாகியுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் தொடர்ந்தும் காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கைவிலங்குடன் சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரம் தனுஷ்க குணதிலக்க நீதின்றில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கையாக, அவர் ஒரு திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் காவல்துறையும் அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது.



 


Post a Comment

Previous Post Next Post