மூடி மறைத்து திருத்தப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தில் சரீஆவுக்கு முரணான விடயங்கள் ! புத்தி ஜீவிகள் குழு காட்டம்

மூடி மறைத்து திருத்தப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தில் சரீஆவுக்கு முரணான விடயங்கள் ! புத்தி ஜீவிகள் குழு காட்டம்


கடந்த அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த அலிசப்ரி அவர்களால்,  முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் பணிப்பாளர் ஹலீம்தீன் அவர்களின் தலைமையில் 
 நியமிக்கப்பட்ட,  முஸ்லிம்  சட்ட தனியார் சட்ட  மீளாய்வு அவறிக்கை,  சமூகத்திற்கு வெளிப்படுத்தாமல் திருத்தப்பட்ட சட்ட விடயங்களில் சில, சரீஆ சட்டத்திற்கு முரணானவை என முஸ்லிம் புத்திஜீவிகள் குழு விசனம் தெரிவித்துள்ளது.

சமூகத்திற்கு வெளிப்படுத்தாமல் மூடி மறைக்கப்பட்டு, திருத்தங்கள் செய்து அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில், வெளியான விபரங்களைத் தொடர்ந்து பெண் சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்று அன்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களை  அமைச்சில் வைத்து சந்தித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சந்திப்பின்போது பல பெண் சட்டத்தரணிகள் உட்பட பல புத்திஜீவிகள் கலந்து கொண்டார்கள்.

லண்டன் கட்டார் துபாய் போன்ற நாடுகளிலிருந்து zoom தொழில்நுட்பம் மூலமாகவும்,  இன்னும் பல புத்திஜீவிகள் நேரடியாகவும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டனர். 

திருத்தப்பட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட சமூகத்திற்கு வெளிப்படுத்தப்படாத முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம்  அமுல்படுத்தப்பட்டால்,  எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்க வேண்டிய பாரியளவிலான நடப்பு பிரச்சினைகள் சம்மந்தமாக  விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதன்போது லண்டனில் இருந்து கலந்துகொண்ட ஸாரீனா அசீஸ், மற்றும் லண்டனில் இருந்து கலந்துகொண்ட சட்டத்தரணி ஷிபானா சரீப்தீன் ஆகியோர் இத்திருத்தத்தினால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம்  எதிர்கொள்ளப் போகும் சவால்களை துள்ளியமாக எடுத்துரைத்தனர். 

இதன்போது அமைச்சர் மிகவும் அவதானத்துடன் செவிமடுத்தமை  குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதன்போது அமைச்சர் திருத்தத்தின் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன எதிர்பார்க்கின்றது என்பதையும் வேண்டி நின்றார்.

இதன்போது அமைச்சருக்கு விளக்கமளித்த முஸ்லிம் புத்தி ஜீவிகள், எமது மார்க்க அனுஷ்டான, கட்டளைகளின்படி, எமது விவாக விவாகரத்து சட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

இது சம்பந்தமாக லண்டனில் உள்ள பெண் சட்டத்தரணி ஸாரீனா அசீஸ்அவர்களை தொடர்பு கொண்ட போது. நடந்தவிடயங்களை  தெளிவுபடுத்தினார். 

முஸ்லிம் சமூகத்திற்கு மூடி தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கையை அமல்படுத்தக் கூடாது என்றும் இது சம்பந்தமாக முஸ்லிம் சமூகம் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொண்டார். 

சட்டத்தரணி ஸரீனா அசீஸ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளின் போது ஐக்கிய நாடு சபையிலும்
வாதாடியமை குறிப்பிடத் தக்கதாகும்.

மேலும் இதில் நேரடியாக கலந்துகொண்ட,கடந்த காலங்களில் பல கூட்டுத்தாபனங்கள் உட்பட பல அரச உயர் பதவிகளை வகித்தவரான அல்ஹாஜ் எம்.எச்.எம்.நியாஸ் அவர்களை தொடர்பு கொண்ட போது.

திருத்தி கையளிக்கப்பட்ட அறிக்கையானது இரு பேச்சுக்களுக்கு இடம் இடமின்றி நிராகரிக்கப்பட வேண்டியவையாகும் எனவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் பற்றி கருத்தில் கொள்ளாது, அரசியல்வாதிகளையும் அரசியல் தலைவர்களையும் திருப்திபடுத்தும் வகையில் முஸ்லிம் தனியார் சட்டம் அமையக்கூடாது இதில் முஸ்லிம் சமூகம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

அறிக்கை கையளிப்பு வைபவத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் கலந்து கொண்டமை பற்றி வினவியபோது, தாம் அதுபற்றி அவரிடம் வினவிய தாகவும், தான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பு அல்லாமல், தனிப்பட்ட ரீதியில் கலந்து கொண்டதாக குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடும்போது, அவ்வாறான ஒரு அறிக்கையை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக கையளிக்கும் போது செயலாளர் தனிப்பட்ட ரீதியிலாவது கலந்து கொண்டு இருக்கக் கூடாது,இதுவே தனது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் அமைச்சர் அலி ஸப்ரி அவர்களால் நியமிக்கப்பட்ட மறுபரிசீலனை குழுவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளரும் அடங்குவதாகவும், அண்மையில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் அவர் அதனை தெரிவிப்பதாகவும் கூறினார்.

அவ்வாறாயின்  இத்திருத்தத்தின் பின்னணியில் உள்ள எதிர்கால பிரச்சினைகள் பற்றியும், திருத்தங்களின் உண்மை நிலை பற்றிய விளக்கத்தை ஏன்  சமூகத்திற்கு வழங்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்தக் காணொளியில் கடந்தகால அரசாங்கம், திருத்தக் குழு மீது கடும் அழுத்தத்தை பிரயோகித்த தாகவும் குறிப்பிட்டுள்ளார். 
எனவே சமூகத்தை வழி நடத்தும் ஆன்மீகத் தலைமைகள் காலா காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடங்கிப் போகுமானால்  அவ்வாறான தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு பொருத்தம் தானா என்றும் கேள்வி எழுப்பினார். 

பேருவளை ஹில்மி


 





1 Comments

  1. பெண்ணியல் வாதிகளின் கெடுப்புடிகள் காரணமாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட மாற்றம் அவர்களது ஐடியாலஜி க்கு ஏற்ற போல் சீரமைக்க ப்பட்டுள்ளது இஸ்லாமிய மார்க்கத்தை அடி தழுவிய சட்டமாக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது முஸ்லிம்களுடைய வாழ்வியல் தத்துவங்கள் அனைத்தும் குர்ஆன் நபி வழி ஆகியவற்றை பின் பற்றியதாக அமைதல் வேண்டும்

    தற்போதைய புத்திஜீவிகள் குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை மார்க்கத்தையும் அதே நேரம் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு விருப்பத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்பது சந்தோஷம் அளிக்கிறது

    ReplyDelete
Previous Post Next Post