Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-127


சற்று நேரத்தில் கமகம வாசனைப் புகையோடு ஒரு பெண் வந்தாள் அவளைத் தொடர்ந்து மயில் இறகில் செய்யப்பட்ட விசிறியோடு இரு பெண் அவர்களோடு  மீனா பானு அழகான தோற்றம் கொண்டு வந்தார்கள் பின்னே தங்கச்சிலையாட்டம் ராஜகுமாரி அசையும் தேர் போல் வந்தார் பின்னாடி இளவரசியார் கம்பீரம் கொண்ட நடையோடு வந்தா இறுதியாக நான்கு காவலர்கள் வருகை தந்தார்கள் அனைவரும் அரண்மனை மண்டபத்தில் முன் வாசல் வந்ததுமே உள்ளே அமர்ந்திருந்தோர் அனைவரும்
எழுந்து நின்றார்கள் மகாராணியும் ராஜகுமாரியும் அமர்ந்ததுமே அனைவரும் அவர் அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.

வணக்கம் மந்திரியாரே நாம் மீண்டும் சபையில் கூடிய விடையத்தைக் கூறி இவர்கள் அனைவருக்கும் பிரியா விடை கொடுத்திட வேண்டும் இனிமேலும் நேரம் நகர்த்தாமல் விரைவாக விசயத்தைப் பேசி ஒரு முடிவுரை கொண்டு வருவோம்  நீங்களே கூறுங்கள். என்றார் இளவரசியார்  .மந்திரியும் நல்லது அரசே இதோ என் கடமையைச் செய்கின்றேன் என்று கூறியவர் அரண் மனை வைத்தியரைப் பார்த்துக் கேட்டார் எங்கே உங்கள் பெண் அவரை அழைத்து வரும் படி கூறி விடுங்கள் என்றவர் குமரனையும் அவர் தந்தையையும் அழைத்தார்.

தாயே நீங்களும் வாருங்கள் என்றார் அரண்மனை வைத்தியர் குமரனின் தாயைப் பார்த்து  மூவரும் எழுந்து சென்றதும் சிரிப்பில் தரையிலே அமரும் படி கட்டளையிட்டார் ராணி எதிர்க் கேள்வி கேட்காமல்  அமர்ந்து கொண்டார்கள்  .அப்போது மீனாவை அழைத்து இளவரசி கூறினார் போய் மூடி இருக்கும் தட்டுக்கள் அனைத்தையும் திறந்து வைத்து விடு என்று உடனே மீனா அவைகளை ஒன்றொன்றாகத் திறந்தார் ஆகா என்ன அற்புதம் பணம் பழம் பொன் பொருள் பூ பட்டு விதம் விதமான எத்தனையோ பொருட்கள்.

சுவையூட்டும் பலகார வகைகள் மாலைகள் இப்படி ஏதேதோ இருக்க மெதுவாக நாட்டாமை மனைவி தன் கணவரின் காதில் கூறினார் ஏங்க இவைகளையெல்லாம் பார்க்கும் போது ஏதோ பெண் பார்க்கும் படலாம் போல் இருக்கே என்று அதற்கு நாட்டாமை அட சும்மா கண்டதைப் பேசாமல் இரு ராணி கவனித்தால் பிரச்னை என்று கூறி அவர் வாயை அடைத்து விட்டு அமைதியாக இருந்தார். அப்போது ஒரு பெண் முகம் மூடிய வாறு வந்து அரசிக்கு வணக்கம் வைத்து விட்டு சுற்றி இருந்தா அனைவரையும் வணங்கி நின்றார். 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments