Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-15


இனியவை நாற்பது-29

கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது.

விளக்கம்:

கயவர்களைக் கழற்றி விட்டு,  வாழ்தல் இனிது. 
வாழ்வில் உயர நினைத்து, ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. 
இல்லாதவன் தானே என்று, யாரையும் இகழ்ந்து பேசாமல், புகழ்பட வாழ்வது இனிது.

இனியவை நாற்பது-30

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல்.

விளக்கம்: 

ஒருவர் நமக்குச் செய்த உதவியின் பலனை நினைத்துப் பார்த்து நன்றியுடன் வாழ்தல் இனிது. 
நடுவு நிலை தவறாமல் நீதி வழங்குகின்ற பண்பு இனிது. 
நம்மிடம் அடைக்கலமாய் வந்த பொருள் பற்றி யாருக்கும் தெரியாது என நினைத்து அதனை தனதாக்கிக் கொள்ளாமல்  ஆட்டையப் இருப்பது மிகவும் இனிது.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments