கத்தரிக்காய் சாதம்!-(சமையல்)

கத்தரிக்காய் சாதம்!-(சமையல்)


தேவையான பொருட்கள்
பிஞ்சு கத்தரிக்காய்--  -கால்கிலோ
நல்லெண்ணை  100 கிராம்
வெங்காயம்  2 
கடலைப்பருப்பு     ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா  அரை டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல்  6 
உளுத்தம்பருப்பு     அரை டேபிள் ஸ்பூன்
நெய் 50 கிராம்
கறிவேப்பிலை கடுகு    சிறிதளவு
பொன்னிஅரிசி அல்லது பிரியாணிஅரிசி 100 கிராம்

செய்முறை

முதலில் கத்தரிக்காயை  நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ,

வெங்காயத்தை நீளவாக்கில்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வாணலியி;ல் எண்ணெயைக் காயவிட்டு கடுகு உளுத்தம் பருப்புபோட்டுத்தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்பாதி வெந்ததும்கத்தரிக்காயைப்போட்டு சிறு தீயை வைத்து மூடாமல் வதக்கவும்

அடிபிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும் 

சிரிது வெந்ததும் உப்புப்போடவும் 

பின் கடலைபருப்பு மிளகாய் வற்றல் தனியா  ஊளுத்தம்பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில்போட்டு கரகரப்பாகஅரைக்கவும்

சாதத்தை குழையாமல் வடித்து ஆறவைத்துக்கொள்ளவும்பின்னர் வதக்கிய கத்தரிக்காயில் சாதத்தை போட்டு கிளறவும் 

பின்அரைத்த பொடியையும் தூவி நெய்யையும் ஊற்றிக் கிளறவும்

நன்றாக்க் கிளறியதும் கொஞ்ச நேரம் அப்படியே மூடி வைக்கவும் பின் பறிமாறவும்



Post a Comment

Previous Post Next Post