ஹிட்லரின் நாசிக் கட்சி ஜெர்மனியர்களிடத்தில்,ஆரியர்கள் நாம், ஆளப்பிறந்தவர்கள் நாங்கள்தான்’ என்று முழங்கத் தொடங்கிய காலகட்டத்தில், 1928ம் ஆண்டு ஹிட்லர் தனது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக கோயபல்ஸ் (புழநடிடிநடள) என்பவரை நியமித்தார்.
உலகத்திலே மிகுதியாகப் பொய் சொன்னவர் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கோயபல்ஸ் ஆவார்அவரிடம் சில வித்தியாசமான குணங்கள் காணப்பட்டன. பிற்காலத்திலே ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராகக் காணப்பட்ட கொயபல்ஸ், 1925ம் ஆண்டிலேயே ஹிட்லரைச் சந்தித்துள்ளார். கோயபல்ஸ் வரலாற்றாசிரியர்களால் மிகவும் விசித்திரமான தோற்றத்தைக் கொண்டவராக வர்ணிக்கப்படுகின்றார். அது அவரது உடல்நலக் குறைபாடாகக் கூட இருந்திருக்கலாமென ஊகம் தெரிவிக்கப்படுகின்றது.
கோயபல்ஸைக் கண்டதும் கேலியாகச் சிரித்துவிடும் பழக்கம் அக்கால மக்களிடையே இருந்தது. ஆனால், அவரது பேச்சைக் கேட்டதும் மக்கள் தங்களை மறந்து அவரது பேச்சுக்குள் சங்கமமாகி விடுவதாக வரலாற்றுக் குறிப்புகளில் அறியக்கிடைக்கின்றது. அதற்குக் காரணம் அவரது நாடகத் தன்மை கொண்ட பேச்சுத் திறனே.
நாடகத் தன்மையுடன் பேசும் திறனை ஹிட்லரிடமிருந்து கோயபல்ஸ் கற்றுக் கொண்டாரா, கோயபல்ஸ்ஸிடமிருந்து ஹிட்லர்கற்றுக் கொண்டாரா என்பது புரியாத புதிராகும். கோயபல்ஸிடமிருந்த நாடகத்தன்மையான பேச்சுத் திறனே ஹிட்லரை கோயபல்ஸிடம் நெருங்க வைத்திருக்க்க கூடும்.
ஹிட்லரின் கொள்கைகளைப் பரப்புவதில் கோயபல்ஸ் கையாண்ட யுக்திகள் இன்றும் கூட வரலாற்றாசிரியர்களால் வியந்து பேசப்படுகின்றது. மூன்று விதமாக கோயபல்ஸ் ஹிட்லரின் கொள்கைகளைப் பரப்பினார்.முணுமுணுப்புப் பிரசாரம், சோதிடப் பிரசாரம், ஒன்றையே திரும்பத் திரும்ப சொல்கின்ற பிரசாரம் என்பனவே அவை மூன்றுமாகும். இரண்டாம் உலக யுத்தகாலத்தில், அவர்பரப்பிய கருத்துக்கள் பொய்யானவையாக இருந்தபோதிலும், அவர்பரப்பிய முறைகள் வலிமையானவைகளாக இருந்ததெனலாம்.
1945 ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் இன்றைக்கு 67 வருடங்களுக்கு முன், இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்கு வரும் தருவாயிலேயே இது நிகழ்ந்தது. ஜெர்மன் நாட்டின் அடுத்த தலைவராக கோயபல்ஸை நியமித்துவிட்டே ஹிட்லர்தற்கொலை செய்து கொண்டார் ஹிட்லரின் இறுதி சாசனத்தை எழுதிய அவரது செயலாளராக இருந்த ஜன்கே (ஆசள. துரபெந) என்பவர் ஹிட்லர்நல்ல மனிதர் என்றும், பண்பாளர்என்றும் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை கூட ஹிட்லரின் பணிப்பெண்ணாகக் கடமைபுரிந்தவர் எரினா பிளஜல் என்பவராவார். பொர்லின் பல்கலைக் கழக கிளினிக்கில் நர்சாகப் பணிபுரிந்த அவர்ஹிட்லரின் பதுங்கு குழிக்கு கிளினிக் மாற்றப்பட்டபோது, அவரும் அழைத்து வரப்பட்டார் அவருடன் இன்னொரு நர்சும் பணிபுரிந்துள்ளார். ஹிட்லரின் பதுங்கு குழி நிலத்துக்கடியில் அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டிடமொன்றாகவே காணப்பட்டதாக பிளஜல் குறிப்பிடுகின்றார்.
ஹிட்லரின் மரணத்தின் பின் கோயபல்ஸின் மனைவியான மாக்டாவை, பிளஜல் பதுங்கு குழியில் சந்தித்துள்ளார்.கோயபல்ஸின் ஆறு பிள்ளைகளும் கோயபல்சின் மனைவி மாக்டாவால் சயனைட் கொடுத்து கொல்லப்பட்டனர், என்று தகவல் வெளியிட்டுள்ள பிளஜல், பிள்ளைகளை பதுங்குகுழிக்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிடுவோம் என்று கொயபல்ஸிடம் மன்றாடியபோதும் அவர் அதனை மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.
பிள்ளைகளின் மரணத்தின் பின்னர் கொயபல்ஸ் தம்பதியினர் மே 1ம் திகதி தற்கொலை செய்து கொண்டனர். ஒரே ஒருநாள் மாத்திரம் ஜெர்மனியின் தலைமைப் பதவியை வகித்தவர்என்ற பெருமையை கொயபல்ஸ் கொண்டுள்ளார்..
Email;vettai007@yahoo.com
0 Comments