
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராகி வருகின்றனர். கடந்தாண்டு பகல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவியது.
காசா நிவாரணம் என்ற பெயரில்...
இந்நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவி வரும் சூழலில், ஜெய்ஷ்-இன்-முகமது, லக்ஷர்-இ-தொய்பா ஆகிய பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பயங்கரவத குழுக்கள் காசா பிரச்னையை வைத்து வளர்ச்சி அடைய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக கூறி இந்த அமைப்புகள் நிதி திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் ஹமாஸ் தளபதி
அதிலும் குறிப்பாக பயங்கரவாத தலைவர் மசூத் அஸாரின் மகனும், சகோதரரும் இந்த நிதி திரட்டலின் மூளையாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லக்ஷர் பயங்கரவாத அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் ஹமாஸின் மூத்த தளபதி நாஜி ஜாகீர் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் அரசியல் முன்னணி அமைப்பான பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (PMML) கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் நஜி ஜாகீர் பங்கேற்றார். இந்நிகழ்வில் பயங்கரவாத கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
டிஜிட்டல் முறையில் நிதி திரட்டல்
சர்வதேச சமூகங்களின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கண்காணிப்பில் சிக்காமல், வங்கிக் கணக்குகளை தவிர்த்து அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு டிஜிட்டல் வேலட்கள் மூலம் பணத்தை திரட்டி வருவதாக கூறப்படுகிறது. நிதி திரட்டுவதில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களும், ஹமாஸ் பயங்கரவாத குழுவும் புதிய முறைகளை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. Easypaisa, கிரிப்டோகரன்ஸி மற்றும் பிற டிஜிட்டல் வேலட்களை பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் நிதி திரட்டுவதாக கூறப்படுகிறது.
மத செயல்பாடுகளுக்காகவே இந்த நிதி திரட்டல் நடைபெறுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதாவது 300க்கும் அதிகமான பள்ளிவாசல்களை மறுகட்டுமானம் செய்வதற்கும், தொழுகை பாய்களை வாங்குவதற்கும், பிற செயல்பாடுகளுக்காக இந்த நிதி திரட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியா மீது மீண்டும் அட்டாக்?
முன்னர், ஜம்மு காஷ்மீரில் நிலவி வந்த பதற்றத்தை பயன்படுத்தி 1990களில் இருந்து பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இதுபோன்ற நிதி திரட்டலை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில் தற்போது காசாவை வைத்து நிதி திரட்டி அதை மறைமுகமாக தங்களின் அமைப்பை பலப்படுத்த பயன்படுத்துகின்றனர் என கூறப்படுகிறது. இதுபோன்ற நிதி திரட்டல்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிதி திரட்டல்கள் மூலமே இந்தியாவின் மீது பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் தொடுத்தன.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments