" தங்கராசு... உனது கடைகளுக்கான வாடகைப்பணம் மாதம்தோறும் எவ்வளவு வசூலாகும்..?" என்று கேட்டார்.
" எட்டுகடைகளை வாடகைக்கு விட்டிருக்கேன். மாசாமாசம் இருபத்தி நான்காயிரம் ரூபாய் வசூலாகும். ஒவ்வொரு கடைகளுக்கும் மாதவாடகை மூவாயிரம் ரூபாய்தான் செல்வம்." என்று சொன்னார் தங்கராசு.
" இந்த வாடகை ரொம்பவும் குறைவு. நானும் பத்து கடைகளை வாடகைக்கு விட்டிருக்கேன். மாதம்தோறும் எண்பதாயிரம் ரூபாய் வருகிறது.
ஒரு கடைக்கு எட்டாயிரம் ரூபாய் வாங்குறேன். இதனால்தான் என்னால் வருசம்தோறும் வேறு இடத்தை விலைக்கு வாங்கமுடிகிறது. இதனால், இன்னும் பல கடைகளை கட்டி வருகிறேன். அதனால் நீயும் வாடகையை உயர்த்து. வருமானம் நிறையவரும். யோசித்துப்பாரு தங்கராசு..."
" ஐந்துவருடமாக, வாடகைப்பணம் பாக்கி இல்லாமல் சந்தோசமாக தாராங்க. இன்னும் இரண்டுமடங்கு வாடகை உயர்த்தினால்... வாடகை தருவதில் பிரச்சனை வரும். இப்போது அவர்களிடம் இருக்கும் சந்தோசத்தை நான் பார்க்கமுடியாது. எங்களுக்குள் இருக்கும் இந்த சகோதர உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படும். அவர்களை கடனாளியாக பார்க்க என்னால் முடியாது. எனக்கு இந்த வாடகைப்பணமே போதும் செல்வம்..." என்று சொன்ன தங்கராசின் பேச்சில், அவரின் நிறைந்த மனதை நான் காண்கிறேன்.
Tags:
சிறுகதை
இந்த நவம்பர் மாதத்தில் நந்தவனத்தேனீக்கள் மற்றும் நல்லமனம் இருசிறுகதையும், வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி