நபி மூஸா (அலை) அவர்களும் “பிர்அவ்னு”ம்
நபி ஐயூப் (அலை) அவர்களின் மகன்மார்களில் ஒருவரே நபி ஸுல்கிப்லி (அலை) அவர்களாவர்.
நபி யாகூப் (அலை) அவர்களின் மூன்றாவது மகன் லாபியின் மற்றொரு மகனான ஆஷிரின் மகன் கஹீத்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் இம்ரான். மற்றவர் யாஷ்ஹாப். யாஷ்ஹாபுக்கு ஒரே மகன் காரூன். காரூனுக்கு சந்ததிகள் இல்லை. இம்ரானுக்கு இரண்டு ஆண் மக்களும், ஒரு மகளும் பிறந்தார்கள். மகளின் பெயர் குல்தூம். இம்ரானின் மகன்மார் இருவரும் நபிமார்களே. ஒருவர் நபி மூஸா (அலை) அவர்களாவர். மற்றவர் நபி ஹாரூன் (அலை) அவர்களாவார்.
ஆண் பிள்ளைகள் பிறந்தால் கொன்று விடவேண்டுமென்ற பிர்அவ்னின் கட்டளைக் காலத்தில் பிறந்து, அல்லாஹ்வின் நாட்டப்படி அவனது அரண்மனைக்கே சென்று, தனது இளமைக்காலத்தை கழித்த நபி மூஸா (அலை) அவர்கள், எகிப்திய நகரில் வைத்து ஒரு மனிதனுக்கு உதவ எடுத்த முயற்சி உபத்திரவத்தில் முடிந்ததால், மத்யனுக்குச் சென்றார்கள். அங்கே நபி சுஐப் (அலை) அவர்களது மகளை மணந்தார்கள். பத்து வருடங்களின் பின்னர் எகிப்திற்கு மறுபடி திரும்பி வருகையிலேயே நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைவனிடமிருந்து “வஹீ” அருளப்பட்டு, நபிப்பட்டமும் கிடைத்தது.
நபி மூஸா (அலை) அவர்களுக்கு பத்துக் கட்டளைகளும், ஹீப்ரு மொழியிலான தவ்றாத் வேதமும் வழங்கப்பட்டது. குர்ஆனில் 136 இடங்களில் நபி மூஸா (அலை) அவர்கள் பற்றிக் கூறப்படுகின்றது. பிர்அவ்னின் அநியாயங்களுக்கு உட்பட்ட பனூ இஸ்ராயீலர்கள் அக்காலப்பகுதியில் எகிப்தில் வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது சகோதரரான நபி ஹாரூன் (அலை) அவர்களோடும் பனூ இஸ்ராயீல்களோடும் இணைந்து பிர்அவ்னிடம் சென்று, அல்லாஹ்வால் தமக்கு அளிக்கப்பட்ட முஃஜிசாக்களைக் காண்பித்து அவனை நேர்வழிப்படுத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
அல்லாஹ்வை நிராகரித்தமைக்காக பிர்அவ்னின் உடலை உலக மாந்தருக்குப் படிப்பினையாக இன்றுவரை விட்டு வைத்துள்ளதாக அல்-குர்ஆனில் (10:92) அல்லாஹ்வே குறிப்பிட்டுள்ளான்.
(தொடரும்)
0 Comments