Ticker

6/recent/ticker-posts

கிழக்கு துர்கிஸ்தான் சீனாவின் “ஷின்கியான்” ஆனதெப்படி? - 2

தனது  அண்டை நாடு முஸ்லிம்  நாடாக  மாறுவதையிட்டு  சீனா அஞ்சியது. அதனால், சீனா  படிப்படியாக  கிழக்கு துர்கிஸ்தானை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

மட்டுமல்லாது, சீனா  கிழக்குத் துர்கிஸ்தானை ஆக்கிரமித்தமைக்கு அதன்  பூகோள அமைப்பும்,  அங்கு செறிந்திருக்கும்  கனிய வளங்களும்  ஒரு காரணமாகும்.

சீனாவின் மொத்த  நிலக்கரியில் 38 வீதம்  கிழக்கு துர்கிஸ்தானில் இருந்தே  உற்பத்தியாகின்றது.  அத்துடன்  அபரிதமான  யுரேனிய வளத்தையும் இது கொண்டிருக்கின்றது.

இங்கு வருடாந்தம்  ஐந்து மில்லியன் டொன் எண்ணெய் உற்பத்தியாகின்றது. ஆனால் எட்டு பில்லியன் தொன் வரையிலான  எண்ணெய் வளம்  இங்கு காணப்படுவதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான கனிய வளங்களைத்  தமதாக்கிக்கொள்வதையும்  முக்கிய நோக்காகக் கொண்டே சீனா - கிழக்கு  துர்கிஸ்தானில்  ஊடுருவுவதற்கு  திட்டங்களை  வகுத்தது.

ஆரம்பத்தில்  - சிலை வணக்கத்திலீடுபட்டிருந்த  கோத்திரத்தினரை உய்கூர் முஸ்லிம்களுக்  கெதிராக தூண்டிவிட்டதோடு , அவர்களுக்குத் தேவையான அனைத்து  உதவிகளையும்  சீன அரசு வழங்கியது.

ஆனால், உய்கூர் முஸ்லிம்கள்   தமது  மனஉறுதி  - நம்பிக்கை  ஆகியவற்றை இழக்காமல் போராடிக் கொண்டே இருந்தார்கள்.

உய்கூர் முஸ்லிம்களுக்கும்   சீனர்களுக்குமிடையே  1759 முதல்   70 வருடங் களுக்கும் மேலாக  நூற்றுக்கணக்கான  போராட்டங்கள்  நடைபெற்றன. இப்போராட்டங்களில்  மில்லியன் கணக்கான  உய்கூர்  முஸ்லிம்கள்  படுகொலை  செய்யப்பட்டனர்.

இறுதியாக 1822 ஆம் ஆண்டு  கிழக்கு துர்கிஸ்தானிய முஸ்லிம்கள்  வெற்றி பெற்றனர்.  அதன்  மூலம் அந்நாடு  சுதந்திரம் பெற்றது.

இப்போராட்டத்திற்கு  உஸ்மானிய  சாம்ராஜ்யம்  உதவியது.

இதனைத் தொடர்ந்த  ஐம்பது வருடக்  காலப்பிரிவு  கிழக்கு துர்கிஸ்தானின் பொற்காலம்  என அழைக்கப்படுகின்றது.

ஆனால், இந்த பொற்காலத்தைச்  சுகிப்பதற்கோ, சுதந்திரத்தை  நிலைத்திருக்க வைப்பதற்கோ  சீனா  விடவில்லை.

1876ம் ஆண்டு  கிழக்கு துர்கிஸ்தானை  மீண்டும்  கைப்பற்றிய தோடல்லாமல், அதன் பெயரை  ஷின்கியாங்  என்றும்  மாற்றிக் கொண்டது.

ஷின்கியாங்   (Xinjiang)  என்றால்ஆக்கிரமிக்கப்பட்ட பூமி என்பது பொருளாகும்.  இப்பெயரே  அன்று  முதல்  இன்று வரை  கிழக்கு துர்கிஸ்தானுக்கு  வழங்கப்பட்டு  வருவதோடு,  அது சீனாவின்  ஒரு மாகாண மாகவும்  பிரகடனப்படுத்தப்பட்டது.
(தொடரும்
)

Post a Comment

0 Comments