Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அனுர அதிசயிக்கத்தக்க வெற்றி ! மர்மம் என்ன


இலங்கை நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரக்குமார திசாநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

பாராளுமன்றத்தில் மிகக் குறைந்த அங்கத்தவர்களுடனும் செல்வாக்குடன் காணப்பட்ட NNP ( தேசிய மக்கள் சக்தி) என்ற கட்சியில் இருந்தே இவர் தெரிவு செய்யப்பட்டார். இவரின் கட்சியின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை வெறும் நான்கு லட்சத்தை அன்மித்த ஒரு  தொகையாகும்.

பெரும், பெரும் பலம் பொருந்திய வேற்பாளர்கள்   போட்டியிட்ட நிலையில்,  மிகக் குறைந்த செல்வாக்குடன், காணப்பட்ட தேசிய மக்கள் சக்தியில் இருந்து ஒருவரை மக்கள் தெரிவு செய்துள்ளனர். இதன் மர்மம் என்ன ?

தேர்தலை பொருத்தவரையில், மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும்  தேர்தல் வாக்குறுதி,  விஞ்ஞாபனமே முக்கியத்துவம் பெறுகின்றது. இதை வைத்தே மக்கள் ஒவ்வொரு வேட்பாளர்களையும் தேர்தல் கட்சிகளையும் தெரிவு செய்கின்றனர்.

அந்த வகையில் பலம் பொருந்திய கட்சிகள் பல்வேறுபட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய நிலையிலும், இலங்கை மக்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கருத்தில் கொண்டு எந்தவித வாக்குறுதிகளையும் வழங்காத ஒரு கட்சியை மக்கள் தெரிவு செய்ததின் மர்மம் என்ன ?

காலாகாலமாக நாட்டில் கஷ்டங்களை அனுபவித்து, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு கஷ்டப்பட்ட மக்கள், தாங்கள்  படும் கஷ்டங்களில்  இருந்தும்,துன்பங்களில் இருந்தும் நம்மை மீட்டெடுக்க ஒருவர் வரமாட்டாரா என்று அங்கலாய்ப்பில் மக்கள் இருந்தனர். அந்த மக்களுக்கு அனுரகுமாரவின் ஜனாதிபதி போட்டியாளர் வரவு  கடவுளின் ஒரு வரப்பிரசாதமாகவே காணப்பட்டது .
அந்த மக்களை அணுக முதலில் அனுர குமார அவர்கள் கைக்கொண்ட னுனுக்கமான வழிமுறை மிகவும் ஒரு வெற்றிகரமான வழிமுறையாகும்.

அதாவது இலங்கையானது சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் போன்ற அதிக வருமானத்தை ஈட்டும் ஒரு சிறிய நாடாகும்.

பெருந்தொகையான  இயற்கை வளத்தையும்,மக்களால் சுமக்க முடியாத வரி வருமானத்தையும் கொண்ட ஒரு சிறிய நாடாகும். இதைவிட நாட்டின் பெருமதி மிக்க வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன, இவ்வாறான ஒரு நிலையில் எமது நாடு ஏன் தொடர்ந்து அதள பாதாளத்தில் தள்ளப்படுகின்றது என்பதைப் பற்றிய சிந்தனையை மக்கள் மனதில் வளர்த்ததோடு, அதற்கான காரணங்களையும் விரிவாக மக்களுக்கு எடுத்துக் கூறினார். இதன் மூலம் மக்களின் சிந்தனையை சிந்திக்கத் தூண்டினார். மக்கள் சிந்திக்க தலைப்பட்டனர்.

இலங்கை தேர்தலை பொருத்தவரையில் மிக நீண்ட காலமாக அரசியல்வாதிகளாலும், அரசியல் கட்சிகளாலும் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். நாட்டின் எதிர்காலம், நாட்டை காப்பாற்றுதல், நாடு ஆபத்தில் உள்ளது, ஏனைய இனங்கள் நாட்டை அபகரிக்க முற்படுகின்றனர் என்ற பெயரில் இன்னவாதத்தை உரம் போட்டு வளர்த்தார்கள்.
இதுவரை காலமும் இவ்வாறான அரசியல்வாதிகளின் ஏமாற்றுதல்களுக்கும் மக்கள் ஏமாந்து போனார்கள். 

இம்முறை தேர்தலில் பலம் பெருந்திய ஆட்சியாளர்கள் 25000/= சம்பள அதிகரிப்பை வழங்குவோம் என்ற போதிலும் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. மக்கள் இதை நிராகரித்தனர். 

25000/= சம்பள அதிகரிப்பு எனபது இலங்கை அரசதுரை வரலாற்றில்  இதுவறை வழங்கப்படாத அளவு பாரிய சம்பள அதிகரிப்பாகும். எனவே தமது சொந்த வாழ்க்கைக்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பை விட பெரிதாக மக்கள் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர், 

ஜனாதிபயாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கா அவர்களைத் தவிர எந்த வேட்பாளர்களும் இனவாதத்தை ஒழிப்பது பற்றியோ, திருட்டை ஒழிப்பது பற்றியோ மக்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி மூன்றே மூன்று தான். அதில் முதல் வாக்குறுதி திருட்டை ஒழிப்பது, இரண்டாம் வாக்குறுதி, நாட்டில் இனவாதத்தை ஒழிப்பது, மூன்றாம் வாக்குறுதி நாட்டின் ஊதாரித்தனமான பொருளாதாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது .

பல்வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நம் நாட்டில்,  நாட்டின் சகல  மக்களுக்கும் சகல பகுதிகளுக்கும் சென்று அனுர குமார திசாநாயக்கா அவர்கள் வழங்கிய ஒரே ஒரு வாக்குறுதி இனவாதத்தை ஒழிப்பேன் என்பதாகும்.

அரசியல்வாதிகளின் ஏமாற்றத்தின் காரணமாக இனவாதத்தில் ஊரிப்போன மக்களும், இனவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் கருத்தொருமித்து ஏற்றுக்கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம் இதுவாகும்.
சுயநலவாத,  ஏமாற்று அரசியல் வாதிகளின் இனவாதத்தால் அழிந்து போன நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும், சகல இன மக்களும் ஒரு தாய் மக்களாக நாட்டில் வாழ வேண்டும் என்பதற்கு சகல இன மக்களாலும் வழங்கப்பட்ட ஒரு சமிக்கையும் ஆணையுமே இந்தத் தேர்தல் முடிவாகும்.

ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பே தேர்தலை பற்றி சிந்தித்தனர். அனுரகுமார அவர்களை பொறுத்தவரையில், சுமார் ஐந்து வருடங்களுக்கு முதலிலே இந்த வெற்றியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

அரசியலில் நடந்து வரும் ஊழல்களையும், மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதையும் மக்களின் சிந்தனையில் விதைக்க தயாரானார். அந்த விதையின் வளர்ச்சியையே அவர் இன்று 23 .09. 2024 இல் அவர் கண்டு கொண்டார்.

தொடர்ந்துவரும் காலங்களிலும் மக்களை சிந்திக்க வைப்பதோடு வித்தியாசமான முறையில் இவர் தனது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வாறேயானால், இனி வரும் காலங்களில் இலங்கை அரசியலில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கும்,இனவாதத்தை விதைத்து பிழைப்பவர்களுக்கும், திருடர்களுக்கும் சாவு மணி என்பதே உண்மையாகும்.

பேருவளை ஹில்மி 




 Ai SONGS

 



Post a Comment

0 Comments