Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

63 ரன்ஸ்.. ரவீந்திரா போராட்டம் வீண்.. 2021 வில்லன் நியூஸிலாந்தை வீழ்த்திய இலங்கை.. இந்தியாவுக்கு பிரகாசமாகும் வாய்ப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம் தேதி கால்லே நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 305 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 114, குசால் மெண்டிஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓரௌர்க்கே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 340 ரன்கள் குவித்து இலங்கையை விட 35 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக டாம் லாதம் 70, கேன் வில்லியம்சன் 55, டேரில் மிட்சேல் 57, கிளன் பிலிப்ஸ் 49* ரன்கள் எடுத்தனர். இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போராடிய ரவீந்திரா: 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 309 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 50, கருணரத்னே 83, கேப்டன் டீ சில்வா 40 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இறுதியில் 275 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 28, டேவோன் கான்வே 4, நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 30 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திர நங்கூரமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் டேரில் மிட்சேல் 8, டாம் ப்ளாண்டல் 30, கிளன் பிலிப்ஸ் 4, மிட்சேல் சான்ட்னர் 2 ரன்களில் அவுட்டாகி 
பின்னடைவை கொடுத்தனர்.

இலங்கை வெற்றி: 

ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து போராடிய ரவீந்தரா அரை சதமடித்து வெற்றிக்கு போராடியதால் 5வது நாளில் 2 விக்கெட்டுகளை மட்டும் கைவசம் வைத்திருந்த நியூஸிலாந்துக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது. அதனால் நியூசிலாந்தை போராடி வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்தரா இன்றைய 5வது நாளில் மேற்கொண்டு ரன்கள் அடிக்காமல் 92 ரன்களில் அவுட்டானார். அதனால் 211 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டிய இலங்கை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை 50% புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2021 ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த வில்லன் நியூசிலாந்து 42.85% புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு சரிந்தது. அதனால் 71.67% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியா 2025 ஃபைனலுக்கு தகுதி பெற வாய்ப்புகள் பிரகாசமாகி வருகிறது.

crictamil




 Ai SONGS

 



Post a Comment

0 Comments