இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அறுகம்பே நிகழ்வானது யூத ஸியோனிஸ்ட்டுகளின் ஊடுறுவல் ஒன்றின் ஆரம்பமாக இருக்குமோ என்று ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் சந்தேகக் கண்கொண்டு நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனுக்கு நேர்ந்துள்ளதைப் போல எதிர்காலத்தில் இலங்கைக்கும் நேரலாம்!
இலங்கயில் ஆரம்பமாகியுள்ள யூதஸியோனிஸ்டுகளின் அடாவடித்தனமான நில கபளீகரம் இதற்குச் சான்றாகும். அரசாங்கமும் மக்களும் இப்போதே விளித்துக் கொள்ளாவிட்டால், பாலஸ்தீனத்தில் நடந்த இஸ்ரேலின் சட்டவிரோத நில அபகரிப்பு நடவடிக்கைகளை ஒத்ததாக இலங்கையிலும் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது!
யூத ஸியோனிஸ்டுகள் அதிகம் கூடும் பகுதி
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது, அலைச்சறுக்கல் (Surfing) செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அப்பகுதி இப்போது யூதஸியோனிஸ்டுகள் அதிகம் கூடும் பகுதியாகக் காணப்படுகிறது.
எவ்வாறாயினும், இப்பகுதிகளில் அண்மைக் காலமாக யூதஸியோனிஸ்டுகளின் நடமாட்டமும், நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக சுற்றுலாப் பயணிகளாக வந்து, இலங்கைக்குள் சட்டவிரோதமாக இங்கேயே தங்கி தொழில் செய்யு கொண்டிருக்கும் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கிலேயே காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்திருக்கும் இந்த இஸ்ரேலியர்கள், வியாபாரத் தளங்களை நிர்மாணித்து, சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும், இலங்கையிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்களைக் கோபத்தில் ஆழ்த்தும் வகையில் மதில்களில் சித்திரம் வரையும் நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மக்கள் போராட்ட அமைப்பைச் சேர்ந்த திருவாளர் புபுது ஜாகொட அண்மையில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று யுத்தத்தில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
மனிதாபிமானமற்ற முறையில் பச்சிளம் குழந்தைகளையும், பெண்கள், வயோதிபர்களையெல்லாம் இஸ்ரேல் இராணுவம் கொன்று குவிப்பது முழு உலகமும் அறிந்த விடயமாகும். இந்தக் கொலைகாரர்களுக்கு இலங்கையர் அஞ்சலி செலுத்த வேண்டுமா?
விடுமுறையைக் கழிக்க வந்தோமா, அலைச்சறுக்கல் பண்ணினோமா, வந்த வழியே திரும்பிப் போனோமா என்றில்லாமல், நாட்டுக்குள் ஊடுறுவி, கட்டிடங்களை வாங்குவது, இஸ்ரேலிலிருந்து பணியாட்களைக் கொண்டுவருவது, வியாபாரம் பண்ணுவது, யூத ஆலயங்கள் கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் செய்துகொண்டு, இந்நாட்டையும் பலஸ்தீனின் இரண்டாம் பாகமாக்கிவிடுவார்களோ என்ற பீதி நாட்டு மக்களுக்கு வந்துவிட்டது!
அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் பல கட்டிடங்களைக் கொள்வனவு செய்துள்ளதாகவும், அங்குள்ள சில ஹோட்டல்களில் இஸ்ரேலியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அப்பகுதியில் யூததேவாலயம் ஒன்றையும் நிர்மாணித்துள்ளதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி ஒருவரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யூதஸியோனிஸ்டுகளான இஸ்ரேலர்களின் கடந்தகால உலக நிகழ்வுகளை முன்னிலைப் படுத்திப் பார்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
1914க்கு முந்தைய காலம்; பாலஸ்தீனத்தை உதுமானியப் பேரரசு ஆட்சி செய்துவந்த அந்தக் காலத்தில், அங்கு அரேபியர்களான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாகவும், யூதர்கள் மிகச் சொற்பமானர்களாகவும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
முதலாம் உலகப்போரில் உதுமானியப் பேரரசு வீழ்ந்ததும், இஸ்ரேல் என்ற ஒரு நாமமே உச்சரிக்கப் படாத ஒரு காலகட்டத்தில், பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் 'பாலஸ்தீனம்' வந்தது!
இதன்போதுதான், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான ‘தேசியத் தாயகம்' தோற்றுவிக்கும் பொறுப்பொன்றை ஐ.நா. வுக்கு நிகராக அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்பு பிரித்தானியப் பேரரசிடம் ஒப்படைத்தது.
கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினருக்கு மிக முக்கியமான நகரம் ஜெருசலமாகும்; யூதர்கள் இதனை அப்போதிருந்துதான் அவர்களுடைய பூர்வீக மண்ணாகக் கருதத் தொடங்கலாயினர்.
பாலஸ்தீனத்து அரபிகளைப் பொறுத்த வரையிலும் இது அவர்களது 'ஜன்மபூமி' என்ற நிலையில் இருந்ததால், யூதர்கள் குடியேறுவதை அவர்கள் எதிர்க்கலாயினர். இந்த எதிர்ப்பானது, உஸ்மானியரின் தோல்விக்குப் பின்னர், பாலஸ்தீனம் பிரித்தானியர் வசம் வந்தது முதல் ஆரம்பமாகியது!
இவ்வாறான எதிர்ப்புக்கு மத்தியிலும், 1920 முதல் 1940 வரை பாலத்தீனத்துக்குள் யூதர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்தமைக்குக் காரணம், ஐரோப்பாவில் யூதர்களுக்கு நடந்த கொடுமைகள்; குறிப்பாக ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் யூதர்கள் எதிர்கொண்ட எதிர்ப்பலைகளாகும்!
சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்ய சபதமெடுத்தான். இரண்டாம் உலகப்போரின்போது ஆஷ்விட்ச் உள்ளிட்ட இனப்படுகொலைக் களங்களிலிருந்து தப்பியோடிய யூதர்கள் பாலஸ்தீனத்துக்குள் தஞ்சமடையலாயினர்!
பாலத்தீனத்திற்டுள் யூதர்களுக்கும், அரபிகளுக்குமிடையே தொடர்ந்துவந்து கொண்டிருந்த மோதல்கள் மீண்டும் பெரிதானதுடன், பிரித்தானியரின் ஆட்சிக்கெதிராகவும் பாலஸ்தீனியர் கொதித்தெழலாயினர். அதனால், 1947ம் ஆண்டு பிரித்தானியா பாலத்தீனத்தை விட்டும் வெளியேறும் எண்ணத்தை மேற்கொள்ளலானது.
அப்போதுதான், பாலத்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடும், பாலத்தீன அரபிகளுக்கு ஒரு நாடும் தோற்றுவிக்கவும், இரு சமூகமும் புனித நகரமாக கருதும் ஜெருசலத்தை சர்வதேச நகரமாக மாற்றவும் ஐ.நா.வுக்கு நிகராக அன்றிருந்த 'அமைப்பு' பரிந்துரைத்தது. இது யூதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தபோதிலும், பாலஸ்தீன அரபிகள் நிராகரித்தே வந்தார்கள்.
1948ல் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பாலஸ்தீன நாட்டை விட்டு வெளியேறியதும், 1948 மே 14ம் திகதி யூதத் தலைவர்கள் "இஸ்ரேல்" என்ற தனி நாடு தோற்றுவிக்கப்பட்டதாக அறிவித்தனர். அன்றைய அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமேனும் இதனைத் தனிநாடாக அங்கீகரித்தார்!
பிரிட்டிஷ் அரசாங்கம், 1948க்கு நீண்ட காலத்திற்கு முன்பே யூதர்களுக்கு அவர்களின் தாயகமாக்கிக் கொள்ள வழங்கிய தெரிவுகளில் ஒன்றாக 'பாலஸ்தீனம்' காணப்பட்டது.
யூதமதத்தின் தொன்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, அப்போது யூதர்கள் பாலஸ்தீனத்தைத் தமது முதற் தெரிவாக்கிக் கொண்டனர். அவர்கள் பாலஸ்தீனத்தை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து விரிவாக்கிக் கொள்ள பிரித்தானியாவுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் உதவலாயின. அன்று தொடங்கிய இனப்படுகொலை, இன்று வரை பாலஸ்தீன மண்ணில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது!
2023ம் ஆண்டில் தொடங்கிய யுத்தம் ஒரு வருடம் தாண்டிவிட்ட நிலையில், 43,000 பாலஸ்தீனியர்களைக் காவு கொண்டுவிட்டது. அதுமட்டுமன்றி, காஸாவைத் தவிடு பொடியாக்கி, சுமார் இலட்சம் பேர்களைப் பட்டினி போட்டுக் கொன்று வருகின்றது.
பாலஸ்தீனுக்குள் இஸ்ரேல் ஊடுறுவி சுமார் ஏழு தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில், அதே நடைமுறையை இலங்கையில் பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில், இலங்கைக்குள் அண்மைக் காலமாக அவர்கள் புரிந்துவரும் நடவடிக்கைகளைக் கொண்டு ஊகிக்க முடிவதாக, ஆதாரங்களுடன் சமூக ஊடகங்கள் காணொளிகள் மூலமாகக் கருத்துக்களை வெளியிட்டு வருவதைக் கொண்டு புரிந்துகொள்ள முடிகின்றது.
கடந்த பத்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக யூதர்கள் இலங்கைக்குள் படிப்படியாக நுழைந்து அத்துமீறியவாறு இலங்கையின் கடற்கரைப் பிரதேசங்கள் சிலதையும், சுற்றுலா மையங்களையும் தமதாக்கி, வாழத் தொடங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
அவர்களது திட்டம் என்னவென்பது தெரியாது. இருப்பினும் அவர்களுக்கென்று ஒரு பின்னணி உள்ளது. சாதாரண சுற்றுலா பயணிகள் பற்றி பயப்படத்தேவையில்லை. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மிக மிக முக்கியம். சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட நாட்டின் தேசிய பாதுகாப்பு பிரதானமானது என்பதை தாய்நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் உணர வேண்டும்.
இவ்வாறு நாட்டுக்குள் நுழைந்துள்ள யூதர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அவ்வப்பகுதிகளிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்களை அச்சுறுத்தவும், அதிக பணங்களை அள்ளிவீசி, பாதாளக் குழுக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் காஸா நெருக்கடி தீவிரமடைந்தபோது, பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியபோது, இந்த பாதாளக் குழுவினர் கொலை மிரட்டல்களுடன், கொடிகளைப் பலவந்தமாக அகற்றி கலாட்டா புரிந்தமை குறிப்பிடத்தக்கது!
இந்த விடயத்தின்போது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அந்த மோசமான செயல்களுக்கு ஆதரவாக இருந்தமைக்கு 'லஞ்சம்' ஒரு முக்கிய ஆதாரமாக இருந்திருக்க வேண்டும்!
தெஹிவளையில் யூத ஆலயம்
தெஹிவளையில் டி அல்விஸ் பகுதியிலுள்ள யூத ஆலயம் ஒன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கி வருகின்றது. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு வருகை தரும் குறுகியகால யூத சுற்றுலாப் பயணிகளுக்குப் போதனைசெய்ய இவ்வளவு பெரிய ஜெபாலயங்கள் (Synagogues) மற்றும் ஷபாத் (Chabad) தேவைதானா என்பது பற்றி இலங்கைக் குடிமகன் சிந்திக்கின்றபோது, இது ஒருவகை நிரந்தர ஆக்கிரமிப்பின் அடையாளமாகத்தான் நோக்க வேண்டியுள்ளது.
குடிமக்கள் அல்லாதவர்களுக்கு இத்தகைய ஊடுறுவலுக்கும், கடலோர ஆக்கிரமிப்புகளுக்கும் அனுமதி வழங்கியது யார்? ஏன்? என்ற கேள்விகள் அவ்வப்போது எழுகின்றபோது, அவை முடக்கி, அடக்கப்பட்டு விடுகின்றன.
யூதர்கள் இங்கு பிரத்தியேக உணவகங்கள் மற்றும் கிளப்களை நடத்துகிறார்கள். கிடைக்கப் பெற்ற தகவலின்படி, அவர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை ரூபாவில் அல்ல; 'ஷேக்கல்ஸ்' (Shekels)களில்தான் மேற்கொள்கின்றார்கள்; அவர்கள் தங்கள் வருவாய்களை 'ஆஃப்-ஷோர்' வங்கிக் கணக்குகள் மூலமே செய்து கொள்கின்றார்கள். இதனால், இலங்கைக்கு எந்தப் பணவருவாயும் கிடைப்பதாக இல்லை.
அவர்கள் தங்கள் தொழிலில் இஸ்ரேலியர்களையே வேலைக்கமர்த்திக் கொள்கின்றார்கள்; அதனால் உள்ளூர் வேலைவாய்ப்புக்கான பலன்களும் கிடைப்பதில்லை!
சுற்றுலாத்துறையின் நோக்கம் இலங்கைக்குள் வெளிநாட்டுப் பண வருவாயும், உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதுமாகும். யூதஇஸ்ரேலியர்களின் இத்தகைய நடவடிக்கைகளால் நாடு எவ்வித நன்மைகளையும் அறுவடை செய்வதாக இல்லாதிருக்கும்போது, சுற்றுலாத்துறைதான் சோரம் போகின்றது!
ஓராண்டு காலமாக மத்திய கிழக்கில் நடாத்திவரும் தாக்குதல்
இஸ்ரேல் கடந்த ஓராண்டு காலமாக மத்திய கிழக்கில் நடாத்திவரும் தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அண்மைக் காலமாக அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
யாஹியா சின்வரின் கொலையின் இறுதி நிமிட ட்ரோன் காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டதும், உலகம் முழுவதிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலானது.
காஸாவில் நடக்கும் சம்பவங்களுக்காக, இங்கு பழிதீர்க்கும் முயற்சியாக யூதர்கள் மீது தாக்குதல் நடாத்த ஈராக்கிலிருந்து இருவர் இலங்கை வருகை தந்துள்ளதாகவும், இவர்களில் ஒருவருக்கு 50 இலட்ச ரூபா கொந்தராத்து கொடுக்கப் பட்டுள்ளதாகவும் இந்திய புலனாய்வுத்துறை இலங்கையிடம் தகவல் வழங்கியுள்ள நிலையில், தாக்குதல் நடத்த வந்தவர்களைக் கண்டறிய தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு, வெலிகம, கொழும்பு , எல்ல, அறுகம்பை பகுதிகளில் உள்ள யூத வழிபாட்டு நிலையங்களுக்கு பாதுகாப்பையும் அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இலங்கையிலிருக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடலாம் என்பதால், அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களிலிருந்தும்
தமது பிரஜைகளை உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளமை ஒரு கண்துடைப்பு நாடகமாக இருக்குமோ என்று கூட சந்தேகம் எழுகின்றது!
இஸ்ரேலிலிருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்துள்ள யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளபோதிலும் கூட யூதர்கள் எவரும் இங்கிருந்து நகர்வது போலத் தெரியவில்லை!
அரசின் அதிரடி நடவடிக்கை
ஆனாலும், அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த 2024.10.24 அன்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 22 இஸ்ரேலியர்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பாலஸ்தீன மோதல்கள் காரணமாக இலங்கையில் பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மைச் சமூகங்களும் இனவாதக் குழப்பத்தையும், கிழக்கில் முஸ்லிம் - தமிழ் கலவரங்களையும் இங்குள்ள யூதர்கள் ஏற்படுத்தலாம்!
வெலிகமை முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையமொன்றுக்கு அருகாமையிலுள்ள யூத ஆலயத்திலிருந்து இரண்டு தடவைகள் தீ வைக்கப்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இது சமூகங்களுக்கிடையில் பிளவுக்கு வழிவகுக்கலாம். இதன் விளைவாக லாபகரமான சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி கூட ஏற்படலாம்.
கடந்தகால அரசாங்கங்கள் ஊழல்செய்து பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும், திவால் நிலையைக் கடப்பதற்காகவும் வருவாய்த்தளமாக சுற்றுலாத் துறையையே புதிய அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். குறிப்பாக நவம்பர் முதல் அறுகம்பே பகுதிக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவர் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அதில் அதிகமானோர் இஸ்ரேலியர்களாக இருக்க வாய்ப்புண்டு.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக தரவுகளின்படி, இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்தே அதிக சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வந்துள்ளனர்.
அதே தரவுகளின்படி, இந்த வருடத்தின் கடந்த ஒன்பது மாதங்களில் இஸ்ரேலிலிருந்து 20,515 பேர்களும், அமெரிக்காவிலிருந்து 43,678 பேர்களும், பிரித்தானியப் பிரஜைகள் 136,464 பேர்களும் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, யூத ஸியோனிஸ்டுகளின் ஊடுருவலைத் தடுப்பதில் தீவிர கவனமும், சாத்தியமான நடவடிக்கைகளும் எடுப்பது காலத்தின் தேவையாகும்.
யூதஸியோனிஸ்டுகளின் இந்தப்போக்கு தடையின்றிச் செல்ல அனுமதிக்கப் பட்டால், அவர்கள் ஸ்ரீ பாத சிகரத்திற்கும் உரிமை கோரும் காலம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!
ஐரோப்பாவில் இது போன்ற செயல்களை முன்னெடுத்ததால்தான், ஹிட்லர் ஸியோனிஸ்டு களைக் கொடுமைப்படுத்தினான்; விரட்டியடித்தான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
பாலஸ்தீன-காஸாவைப் போன்றுஇலங்கையும் மாறிவிடும் அபாயம்
இலங்கை மக்கள் இந்த ஊடுறுவல் நடவடிக்கையைப் புறக்கணித்தால் ஒரு நாள் பாலஸ்தீன-காஸாவைப் போன்று இலங்கையும் அவர்களின் இரண்டாவது தாயகமாக மாறிவிடும் நிலைகூட ஏற்படலாம் என்றவாறான, இலங்கை மக்களின் உள்ளக்குமுறல்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பதிவிடப்பட்டு வருகின்றன.
ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதை விட, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு என இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
அறுகம்பேப் பகுதியின் பாதுகாப்பு குறித்து அண்மையில் கழுத்துறையில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச்சுறுத்தல்களைப் பற்றி அறிந்து கொள்வதும், மக்களைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை. இவற்றைச் சரியாக நிறைவேற்றுவதில் தனது அரசாங்கம் பொறுப்பை சரிவரச் செய்யும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பை பேணுவதற்கான அவரது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது!
லஞ்சத்திற்கு அடிபணியாத நமது புதிய ஜனாதிபதி இந்த உண்மைகளை முன்னிலைப்படுத்தி, இவ்விடயத்தினை சரியான முறையில் அணுகி ஆராய்ந்து, ஸியோனிஸ ஊடுறுவலிலிருந்து நமது இலங்கைத் தாய்த்திருநாட்டைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இலங்கைப் பிரஜைகள் எல்லோருக்கும் உள்ளது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments