அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியானது பல அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கேப்டனான அவரை வெளியேற்றிய அந்த அணியின் நிர்வாகம் முதல் வீரராக ரிங்கு சிங்கை 13 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. அதேபோன்று அவருடன் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா ரமன் தீப் ஆகியோரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தா அணி தன்னை தக்க வைக்காதது சற்று ஏமாற்றம் அளித்ததாகவும் அதன் காரணமாக தான் அழுததாகவும் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.கே.ஆர் அணியை பொறுத்தவரை அது ஒரு முற்றிலுமான குடும்பம்.
அங்கு இருக்கும் 20,25 வீரர்கள் மட்டுமல்லாமல் நிர்வாகம், ஊழியர்கள் என அனைவருமே ஒரு குடும்பமாக இருந்தோம். முதலில் என்னை கே.கே.ஆர் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னை தக்க வைக்காததால் எனக்கு அழுகை வந்தது. இருப்பினும் நிச்சயம் மீண்டும் என்னை கே.கே.ஆர் அணி தேர்வு செய்யும் சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மீண்டும் நான் கொல்கத்தா அணிக்காக விளையாடும்போது நிச்சயம் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை என்னை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் நான் எந்த அணிக்காக விளையாட போகிறேனோ அந்த அணிக்காக என்னுடைய முழு பங்களிப்பை வழங்குவேன் என வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments