(3/11/2024) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கோவை கணபதி டெக்ஸ்டூல் எதிரில் உள்ள தமிழறிஞர் விஜய சண்முகம் அவர்களின் விஜெய் இண்டஸ்டிரீஸ் வளாகத்தில் உள்ள திருக்குறள் கருத்தரங்கக் கூடத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வெண்பா கவிஞர்.அகவை முதிர்ந்த தமிழறிஞர் நம்பிக்கை நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் அகவை முதிர்ந்த தமிழறிஞர் வெண்பா கவிஞர். ராமகிருஷ்ணன் (கவிஞர். இளம்விழியன்) அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
கூட்டம் துவங்கியதும் தலைவர்.அகவை முதிர்ந்த தமிழறிஞர் சூலூர் கலைப்பித்தன் அவர்கள் வயது முதிர்வு காரணமாகத் தன்னால் தொடர்ந்து களப்பணியாற்ற முடியாது என ராஜினாமா கடிதம் கொடுத்தது வாசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் கவிஞர். இளம்விழியன் அவர்களும் தன்னால் எழுத படிக்க கண் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, வயது மூப்பும் ஒரு காரணம் என தன்னை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டார்.
கவிஞர். நம்பிக்கை நாகராஜன் அவர்களும் தன் வயது முதிர்வு ஒரு காரணமாகவும்,தான் வகித்த பொருளாளர் பொறுப்பினை மற்றவர்களும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் ஒப்புதலோடு புதிய நிர்வாகிகளாக...
அகவை முதிர்ந்த தமிழறிஞர் வெண்பா கவிஞர் கலைமாமணி மு.பெ. இராமலிங்கம் அவர்கள் தலைவராகவும், பொதுச் செயலாளராக அகவை முதிர்ந்த தமிழறிஞர், எழுத்தாளர் முகில்தினகரன் அவர்களும், பொருளாளராக வெண்பா கவிஞர். அகவை முதிர்ந்த தமிழறிஞர் கு.கணேசன் அவர்களும்,
மேற்கண்ட பொறுப்பில் உள்ளவர்களே மண்டலப் பொறுப்பிற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை,நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, சேலம்,நாமக்கல் மாவட்டங்கள் உள்ளடக்கி ஒரு மண்டலமாகத் தலைமை அறிவித்துள்ளது.
ஆறுமாவட்டங்களில் உள்ள அகவை முதிர்ந்த தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அன்புடன் செய்தி பகிர்தல்
முனைவர். கோவை கிருஷ்ணா.
ஒருங்கிணைப்பாளர்,
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கம்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments