ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இம்முறை அம்பாறையில் போட்டியிடவில்லை. நாம் ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்தி கட்சியை பலப்படுத்த நிபந்தனை இன்றி ஆதரிக்கின்றோம் என, கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மெளலவி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரசியல் அதிரும் அதிரடி முடிவை, அவசர கடிதம் ஒன்றின் முலம் ஜனாதிபதிக்கு மெளலவி அவர்கள் அறிவித்துள்ளார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த முபாரக் மெளலவி தமது கட்சி எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமூகம் எதிர் நோக்கும் பின் வரும் சில ஆலோசனைகளையும் இதன் போது உலமா கட்சித்தலைவர் முன் வைத்துள்ளார்.
கல்முனை பிரச்சினையை யாரும் பெரிதுபடுத்தி இனமுரண்பாடுகளை ஏற்படுத்தி லாபமடைய இடமளிக்க கூடாது.
மேலும் கல்முனையை இன அடிப்படையில் பிரிப்பதற்கு இடமளிக்க கூடாது என்பதுடன், கல்முனை உப செயலகத்தை ரத்து செய்து பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து, தனியான செயலகம் தமிழ் பிரதேசத்துக்கு வழங்க வேண்டும் எனவும் தெவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திரத்துக்கு பின் பேரினவாதத்தால் அபகரிக்கப்பட்ட அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்தல் வேண்டும்.
2010ம் ஆண்டுக்கு பின் வழங்கப்படாமல் இருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்க வேண்டும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கைவைப்பதை தவிர்த்தல், மற்றும் முஸ்லிம்களை சீண்டிப்பார்க்கும் வகையில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளை அனமதிக்கக் கூடாது எனவும் தெவித்துள்ளார்.
மேலும் தமது ஆதரவை தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஆசிரியர் ஆதம்பாவா அவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிதாதுள்ளார்.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments