ரயிலில் திகில்!!

ரயிலில் திகில்!!


ஜப்பானின் Shinkansen எனும் அதிகவேக ரயிலில் 2 மணி நேரப் பயணம்....

ரயிலில் Zombie பேய்கள்...

ஓடவும் முடியாது...ஒளியவும்முடியாது...

Halloween கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட திகில் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் (19 அக்டோபர்)  40 பேர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பாக இருக்கவேண்டிய ரயில் பயணம் ஆபத்தான ஒன்றாக மாறும்போது என்னவாகும் என்பதைக் காட்ட விரும்பியதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

தென் கொரியாவின் 'Train to Busan' திரைப்படத்தை மையமாக வைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தோக்கியோவுக்கும் ஒசாக்காவுக்கும் இடையிலான ரயில் பயணத்தில் 'பயணிகள்' சிலர் திடீரென்று Zombie பேய்களாக மாறினர்.

பேய்கள் பின்னர் பயணிகளைத் தாக்கின..

'துப்பாக்கிகள்', 'ரம்பங்கள்' ஆகியவை இடம்பெற்றன.

திகிலுக்கு இடையே நடனம்...

பிரபலப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் (Michael Jackson) 'Thriller' பாடலுக்கு Zombie பேய்கள் ஆடின.

திகில் அனுபவத்துக்கு 50,000 யென் (438 சிங்கப்பூர் வெள்ளி) நுழைவுச்சீட்டு.

seithi



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post