பாராளுமன்றத் தேர்தல், அரசியல் என்பது, பகைமையே வளர்த்துக் கொள்ளவும், வைராக்கியங்களை தீர்த்துக் கொள்ளவும், நீண்டகால பகைமைகளுக்காக பழி தீர்த்துக் கொள்ளவும் வழங்கப்படும் ஒரு சந்தர்ப்பம் அல்ல.
ஒரு சிந்திக்கும் சமூகத்திற்கு, சிந்தித்து தமது நாட்டிற்கு, தமது. சமூகத்திற்கு, தமது ஊருக்கு தேவையான உறுப்பினர்களை தெரிவு செய்துகொள்ள அவ்வப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜனநாயக உரிமை என்பதை முதலில் பேருவளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பேருவளை மக்களின் தேர்தலைப் பொறுத்தவரையில், ஜாஹிலீயா காலத்தை போல் பல தசாப்தங்களை கடந்து வரும் பகைமையே பாராட்டப்பட்டு வருகின்றது.
இதைப் பற்றி சிந்திக்காத வரையில் பேருவளை மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது ஒரு கனவாகும்.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து முன்று முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என சிலர் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், ஒரு முஸ்லிம் கூட தெரிவு செய்யப்பட மாட்டார் என, தேர்தலுக்கு முன்பே நான் ஒரு பதிவை இட்டிருந்தேன்.
பேருவளையில் பிறந்து, பலவருடங்களாக பேருவளையில் வாழ்ந்து, பேருவளையில் பல அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டவன் என்ற அனுபவத்திலேயே அன்று அதைக் குறிப்பிட்டிருந்தேன்.
சுமார் 120 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட செல்வச் செழிப்பு மிக்க பேருவளை மக்களுக்கு, பல வருடங்களாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுபினரையாவது பெற்றுக்கொள்ள முடியாமல் போனது ஒரு பெரிய கவலையும் துரதிரஷ்டவசமும், தோல்வியுமாகும்.
பேருவளை முஸ்லிம்களின் தேர்தல் முடிவுகள், அவர்களின் ஒற்றுமை அற்ற தன்மையை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றது.
ஒரே கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட இப்திகார் ஹாஜியார் 40022 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற அதே வேலை, அதே கட்சியில் போட்டியிட்ட அஸ்லம் ஹாஜியார். 15379 ஆயிரம் வாக்குலையே பெற்றிருந்தார்.
இருவரும் முஸ்லிம்கள். வித்தியாசமான கட்சி, போட்டியிட்டது ஒரே சின்னம் 24643 ஆயிரம் வாக்கு வித்தியாசம் இதில் நடந்தது என்ன என்பது தெளிவாக தெரிகின்றது.
இதை மறுபக்கமாக சிந்திக்கும்போது, பல நெடுங்காலமாக முஸ்லிம் காங்கிரஸ் களுத்துரை மாவட்டத்தில் போட்டியிட்ட போதும், ஒரு உறுப்பினரைக் கூட பெற்றுக்கொள்ளவிலை, பெற்றுக்கொள்ளவும் முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் இன்னொரு கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட போதிலும், சில முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள், அடுத்த கட்சிக்காரர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது இம்முறை வாக்கு என்னும் போது தெளிவாகியது. முஸ்லிம் காங்கிரஸில் போட்டுயிடுபவர்கள் மட்டுமே முஸ்லம் என்பது போல இவர்களின் நம்பிக்கை.
எனவே இவர்கள் முஸ்லிம் சமூகம் தோக்க போட்டியிடுகின்றார்களா ? ஜெயிக்க போட்டியிடுகிறார்களா என்பதை அவர்களே அறியவில்லைபோல். எதற்கெடுத்தாலும் அருவருக்கத்தக்க அரசியலுக்கும் அல்லாஹ் அக்பர் அவர்களிடமிருந்து மாத்திரமே ஒலிக்கின்றது.
அடுத்த பக்கமாக நோக்கும்போது, நான் செத்தாலும் அடுத்தவன் வாழக்கூடாது என்ற நோக்கத்துடன், எந்த விதத்திலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு ஒருவர் பாராளுமன்றம் செல்ல முடியாது என்று, இன்று பிறந்த பாலகனும் அறிந்த நிலையிலும், சிலிண்டர் சின்னத்தில் இன்னொரு முஸ்லிம் சகோதரரை போட்டியிடச் செய்து, இன்னொரு முஸ்லிம் பாராளுமன்றத்துக்கு செல்வதை தடுத்தார் இன்னொருவர், இவர் பின்னும் சில சிந்தனையற்றவர்கள்.
சென்ற முறை பணத்திற்கு விலைபோன பானந்துறை ஹாஜி யார்...? ஒருவர் சுயேற்சையில் ஒரு குழுவை களமிறங்கி களுத்துறை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கிடைக்கும் வாய்ப்பு இழக்க செய்தார்
பேருவளை அரசியலை கையில் எடுத்து, அழகாக வழி நடாத்தி இலகுவாக இரண்டு முஸ்லிம்களை பாராளுமன்றம் அனுப்ப அரசியல் அனுபவம் பெற்ற இம்தியாஸ் பாகிர்மாகார் போதுமானவர்.
ஆனால் அவர் பேருவளை முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதில் எந்த அக்கறையும் செலுத்தவுமில்லை, எந்த முஸ்லிம் அபேற்சகரின் மேடையில் ஏறவுமில்லை , மாறாக களுத்துறை மாவட்டத்தின் பேருவளைக்கு வெளியே, வெளியூர் பகுதிகளில் உள்ள பல அபேச்சகர்களின் வெற்றிகாக அரும்பாடுபட்டார். இவரின் திரை மறைவில் உள்ள, வெளிவராத உண்மை என்ன ?
மறுபக்கம் Npp கட்சியைப் பெறுத்தவரையில் அரூஸ் அசாத் அவர்களுக்கு பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதியில் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டு இருந்தபோதிலும், பேருவளை மக்கள் அனேகமானோர் கட்சிக்கு மட்டுமே வாக்களித்திருந்தனர். இது இன்னொரு புறம்.
எனவே பேருவளை மக்களிடத்தில் அரசியலில் உள்ள பொறாமை, பகைமை எடுத்தெறியப்படும் வரை ஒரு உறுப்பினரை பெற்றுக் கொள்ள முடியாது என்பது உண்மை.
ஆனால் Npp தேசிய பட்டியலிலாவது ஒரு பிரநிதித்துவம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த போதிலும் அதுவும் ஓடும் நீரில் வரையும் ஓவியமாகவே தென்படுகின்றது. இந் நிலையில், ஒரு ஊர் விடயம், ஒரு பாடசாலை விடயம் என வரும்போது பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரால் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பாராளுமன்றம் அனுப்பிய உறுப்பினரின் உதவிகளையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Sir...Sir....என அவர்களின் பின் ஓட்டினாலும் அவர்களின் பகுதிக்கு அவர்கள் செய்து மீதமுள்ளவையையே அவர்கள் நமக்கு தர வேண்டும். அதுவே நியாயமும் தான்.
நம்மிடம் ஒற்றுமை அற்று போனதற்கு அவர்கள் பழி அல்ல.
120 ஆயிம் வரையிலான முஸ்லிம் வாக்குகளை கொண்டுள்ள பேருவளை தொகுதி மக்கள் இனியாவது சிந்திப்பார்களா ?
இதேவேளை 160 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை மாத்திரம் கொண்டுள்ள கொழும்பு மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்களை எவ்வாறு பெற்றுக் கொண்டோம் என்பதை பேருவளை மக்களின் கவனத்தில் கொண்டுவருவது சிறந்த படிப்பினை என நினைக்கின்றேன்.
கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டுமே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றர். குறிப்பாக மத்திய கொழும்பு, கொழும்பு தெற்கு, தெஹிவளை பகுதிகளிலே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர்.
கொழும்பு மாவட்டத்தின் மீதமுள்ள ஏனைய பகுதிகளில் எல்லைப் பகுதிகளில் பெரும்பான்மை மக்களே செரிவாக வாழ்கின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகளை நோக்கும்போது அனைத்து பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்களும் ஒரு அரசியல் மாற்றத்தையே விரும்புவது தெளிவாகியது.
மிகக் கூடுதலான முஸ்லிம் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பி Npp கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.
கடந்த கால நாட்டின் ஊழல் இனவாதம் என்பனவற்றை எடுத்து நோக்கும் போது இது ஒரு வரவேற்கத்தக்க சரியான முடிவாகும்.
பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் ஆளும் Npp கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் அதேவேளை முஸ்லிம் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் ஒரு தேவையும் இருந்தது.
ஆனால் தேர்தல்கள நிலவரம் பற்றி ஆராய்ந்தபோது அனைத்து முஸ்லிம் மக்களும் Npp கட்சிக்கு வாக்களிக்கும் நிலையே காணப்பட்டது. மக்கள் தூர நோக்குடன் சிந்திப்பவர்களாக காணப்படவுமில்லை, மக்களின் சிந்தனைகளில் அவ்வளவு தூரம் இருக்கவுமில்லை.
இரு முஸ்லீம்கள் போட்டியிடும் sjp க்கு நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்ற கணக்கெடுப்பு தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக உடனடியாக செயல்பட்டோம். கிடைக்கவிருக்கும் ஐந்து உறுப்பினர்களுக்குள் இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் உறுதியும் சகலரிடமும் காணப்பட்டது.
எந்தவித பொறாமையும் வெட்டுக்களும் இடம்பெறவில்லை. முஜிபுர் ரஹ்மான் மரிக்கார் போன்றவர்களை இந்த முஸ்லிம் சமூகம் இழக்குமாயின் முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படப் போகும் பெரிய நஷ்டம் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினோம்.
முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இந்த உண்மையை எடுத்துக் கூறி, Npp கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் அதே வேலை, எமது பேசும் குரல்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற யாதார்த்தத்தை எடுத்துக் கூறினோம்.
இதற்காக தெஹிவலை Rose Wood (பழைய ஸஹ்ரான் ஹோல்) இல் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, பல பிரதேசங்களிலும் உள்ள முக்கியஸ்தர்களை வரவழைத்தோம்.
ஒரு விடயத்தைச் சொன்னால் சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய, எடுபடக்கூடிய, ஒருவரான அம்ஹர் மெளலவியை வரவழைத்து, அவர் இதை தெளிவாக எடுத்துக் கூறினார். அவரின் உறையில் சிறு பகுதி.
" நான் இன்று இங்கு அரசியல் பேச வரவில்லை. யாருக்காகவும் வக்காலத்து வாங்க இங்கு வரவில்லை. முஜீப், மரிக்கார், போன்றவர்களிடம் இருக்கும் ஒரு ஊழலை இந்த சபையில் இருந்து யாராவது ஒருவர் எழுந்து
சுட்டிக் காட்டுவார்களாயின், இந்த சபையில் இருந்து இந்த நிமிடமே நான் வெளியேறி விடுகின்றேன்.
தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஒரு நல்ல மனிதர், இனவாதம் அற்றவர், ஊழல்கள் அற்றவர், நாடு நல்ல நிலையில் செல்லும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியும்.
தெரிவு செய்யப்பட்டு இருக்கும் புதிய அரசாங்கம், ஒரு புதிய அரசியல் திட்டத்தை எழுத உள்ளது. அது அவ்வாறே செய்யப்பட வேண்டும். அது காலத்தின் தேவை, இலங்கை அரசியல் திட்டத்தில் எமது உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவைகள் தொடர்ந்தும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக ஆலோசனைகளை முன்வைக்க, அனுபவமுள்ள, பேச்சுத் திறமையுள்ள, பேசக்கூடிய முஜீபுர் ரஹ்மான், மரிக்கார் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் கட்டாயம் அங்கத்துவம் பெற வேண்டும். இதற்காகவே நான் இங்கு வந்தேன். இந்த முஸ்லிம் சமூகத்தில் நான் ஒரு உலமா என்ற வகையில் இதை நான் உங்களுக்கு உணர்த்த வேண்டும். இல்லாவிடில் நான் அல்லாஹ்விடத்தில் விசாரிக்கப்படுவேன். முஜீப் போன்றவர்களை நாம் இந்த தேர்தலில் இழப்போமாயின் அது முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஏற்படப் போகும் ஒரு நஷ்டம். நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்க இங்கு வரவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை நினைத்தே இங்கு வந்தேன்.
எனவே ஆளும் Npp கட்சியில் போட்டியிடும் அபேட்சகர் ஒரு படித்தவர்,ஒரு வைத்தியர், நற்பண்புள்ள நற்குணமுள்ள ஒரு நல்ல மனிதர். முஸ்லிம்கள் வாக்களித்து அவரை தெரிவு செய்து, அரசாங்கத்துக்கு எமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேலை, பேசக்கூடிய எமது குரல்களையும் முஸ்லிம் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த தகவலை அனைத்து முஸ்லிம்களிடமும் கொண்டு சேருங்கள்"
அவர் ஒரு மணித்தியாளம் அளவில் பேசிய உரையின் முக்கிய சுருக்கமே இது.
Npp க்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள ஒரு வீட்டில் 4 வாக்குள் இருக்குமாயின் அதில் 2 வாக்குகளை எமது பேசும் குரல்களுக்காக வழங்கும் படி கேட்டுக்கொண்டோம். இந்த உண்மையை நண்பர்கள் மூலமாகவும், பகுதிகளின் முக்கியஸ்தர் மூலமாகவும், அதி தீவிரமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தோம்.
மேலும் சில உலாமாக்களும், முக்கியஸ்தர்களும் இந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
தீர்ப்பு இறைவன் கையில் அவன் நாடியது நடக்கும் முயற்சி எமதுகையில் என முயற்சிகளை மேற்கொண்டோம். அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.
யாரும் யாரையும் வெட்டவில்லை. இதை விளங்கும் மக்கள் விளங்கி ஏற்றுக் கொண்டார்கள். எமது பேருவளையைப் போன்று கட்சி வெறிகளோ அரசியல் கோபம் வைராக்கியங்கள் இந்த மக்களிடம் இருக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் இதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.
Mujeeb. 43737
Marikkar. 41482
2255 வாக்கு வித்தியாசங்கள் மட்டுமே.
ஏனெனில் மரிக்காரை விட mujeeb மக்கள் மத்தியில் அதிக சரளமாகவும் நட்பாகவும் அதிகமாகவும் பழகுபவர் இதுவே இந்த சின்ன வித்தியாசம்.
கொழும்பு வாழ் மக்கள் சிந்தித்தார்கள். விளங்கப்படுத்திய யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். மூன்று அங்கத்தவர்களை தேர்வுகளை தெரிவு செய்ய இந்த ஒற்றுமையே வெற்றி.
ஆனால் பேருவளை மக்களை பொறுத்தவரையில் இன்று ஒரு பாடசாலைக்கான சிறு உதவியை பெற்றுக் கொள்ளவும், பெரும்பான்மை மக்களிடத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை. உண்மையில் கவலை அளிக்கிறது.
இது ஒரு இனவாத பதிவு அல்ல. ஒரு யதார்த்தத்தை மறைமுகமாக எடுத்து உணர்த்தி இருக்கின்றேன். விளங்குகின்றவர்கள் விளங்கிக் கொள்ளட்டும்.
சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும்.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments